You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரதமர் நரேந்திர மோதியின் தொட்டுத் தொடரும் தலைப்பாகை பாரம்பரியம்
இந்திய சுதந்திர தினத்தின் 73வது ஆண்டு நிகழ்வில் டெல்லி செங்கோட்டையில் உரை நிகழ்த்திய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்கள் கலந்த தலைப்பாகையை அணிந்திருந்தார்.
பகட்டான ஆடை இல்லாமல் வெள்ளை நிற அரை கை குர்தா அணிந்திருந்தார். இந்திய பிரதமராக, நரேந்திர மோதிக்கு இது ஆறாவது சுதந்திர தின நிகழ்வு.
சரி, இதற்கு முந்தைய சுதந்திர நிகழ்வுகளில் மோதி என்ன மாதிரியான நிறம் மற்றும் வடிவங்களில் தலைப்பாகை அணிந்திருந்தார் என பார்ப்போம்.
2018
கடந்தாண்டு, அதாவது 72வது சுதந்திர தின நிகழ்வில், அவர் காவி நிறத்தில் தலைப்பாகை அணிந்திருந்தார். இந்த தலைப்பாகையில் சிறிய அளவில் சிவப்பு வண்ணமும் இருந்தது. தலைப்பாகை கணுக்கால் வரை நீளமாக இருந்தது.
2017
இந்த ஆண்டு அவர் வெளிர் சிவப்பும், மஞ்சளும் கலந்த தலைப்பாகை அணிந்திருந்தார். இதில் பட்டு ஜரிகை கோடுகளும் இருந்தன. இந்தத் தலைப்பாகையின் வால் பகுதி நீளமாக இருந்தது.
2016
பிங் மற்றும் மஞ்சள் கலந்த வண்ணத்தில் தலைப்பாகை அணிந்திருந்தார்.
2015
மஞ்சள் நிற தலைப்பாகையில், சிவப்பு மற்றும் அடர் பச்சை உள்ளிட்ட கோடுகள் இருந்தன.
2014
பிரதமராக தனது முதல் சுதந்திர தின நிகழ்வில், ஜோத்பூரி டிசைன் தலைப்பாகையை அணிந்திருந்தார். சிவப்பு நிறத்திலான இந்தத் தலைப்பாகையின் வால் பகுதியில் பச்சை ஜரிகை இருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்