தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை - 'மாமூல்' வாங்கும் போலீசார் மீது நடவடிக்கை

பட மூலாதாரம், Getty Images
இன்று இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி - தமிழக டி.ஜி.பி சுற்றறிக்கை
தமிழக காவல்துறை தலைவர் ஜே.கே. திரிபாதி தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 'மாமூல்' வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.
கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்களிடம் இருந்து மாமூல் வாங்குவது கடுமையான குற்றமாக கருதப்படும் என்றும், இதுபோன்ற புகார்கள் வரும்போது, அந்த புகார்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்து - உலக மொழிகளில் 6%-ஐ பேசும் இந்தியா

பட மூலாதாரம், HTTP://WWW.SHH.MPG.DE
உலகில் பேசப்படும் மொழுகளில் 6% மொழிகள் இந்தியாவில் பேசப்படுவதாக தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவிக்கிறது.
உலகிலேயே அதிகமான பழங்குடியின மொழிகள் பேசும் நாடாக பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு தேசமான பப்புவா நியூ கினி உள்ளது. அங்கு 840 மொழிகள் பேசப்படுகின்றன.
453 பழங்குடியின மொழிகளுடன் இந்தியா இந்தப் பட்டியலில் நான்காம் இடம் பெற்றுள்ளது. தற்போது வழக்கத்தில் இருக்கும் மொழிகள் மட்டுமே இதில் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
'எத்னோலாக்' எனும் தரவு தொகுப்பை மேற்கோள் காட்டி தி இந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஏரியைக் காணவில்லை
சென்னை வானகரம் அருகே அடையாளம்பட்டு எனும் கிராமத்தில் 2.5 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களுக்கான நிறுத்தமாக மாற்றப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 50 கோடி ரூபாய் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தக் கிராமத்தின் வேளாண் தேவைகளுக்காக அந்த ஏரி நீரை வழங்கியுள்ளது.
ஆக்கிரமிப்பு உள்ளதை ஒப்புக்கொண்டுள்ள வருவாய் அதிகாரி ஒருவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
பிற செய்திகள்
- இந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்: இரு தரப்பு வணிகத்தையும் துண்டிக்கிறது
- தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் மணிகண்டன் நீக்கம் - காரணம் என்ன?
- 'கார்டியடாக் அரெஸ்டால்' உயிரிழந்த சுஷ்மா - இதய நோய் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
- “தமிழ்நாட்டிற்கு அச்சுறுத்தலாகும் சஹ்ரான் கருத்துப் பரப்பல்” - ரணில் கருத்து
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












