You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சட்டப்பிரிவு 370 சிறப்புரிமை ரத்து: இனி என்னென்ன நிகழும்? - 10 தகவல்கள்
"அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு வழங்கும் அதிகாரத்தின்படி மாநில அரசின் ஒப்புதலோடு" குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவில் இதுவரை இந்தியாவில் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் இனி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசின் ஒப்புதலுடன் என்று சொல்லும்போது, அது இங்கு மாநில ஆளுநரைக் குறிக்கும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், என்னவெல்லாம் நிகழலாம் என்பதை அரசமைப்புச் சட்ட சட்ட வல்லுநர் குமார் மிஹிரிடம் பிபிசி இந்தி சேவையின் வினீத் கரே பேசி தொகுத்த பத்து தகவல்கள்.
- இந்திய குடியுரிமை உள்ள யார் வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கலாம்.
- ஜம்மு காஷ்மீர் அரசுப் பணிகளில் காஷ்மீர் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே சேர முடியும் என்று இருந்தது. இனி யார் வேண்டுமானாலும் சேரலாம்.
- முன்பு அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் உரிமை மாநில முதல்வரின் ஆளுகைக்கு கீழ் இருந்தது. இப்போது அது ஆளுநர் வழியே நேரடியாக உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது.
- ஒன்றிய அரசு ஏதேனும் சட்டம் இயன்றினால், காஷ்மீர் மாநில அரசு ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே அது காஷ்மீரில் நடைமுறைக்கு வரும். ஆனால், இனி அப்படி இல்லை.
- அது போல உச்சநீதிமன்ற உத்தரவுகளும் நேரடியாக காஷ்மீரில் நடைமுறைக்கு வரும்.
- காஷ்மீர் மாநிலத்திற்கு என்றே உள்ள கொடி முக்கியத்துவத்தை இழக்கும்.
- சட்டப்பேரவையின் ஆயுள் காலம் ஆறு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாக மாறும்
- பெண்கள் தொடர்பான உள்ளூர் தனிநபர் வழக்காறு சட்டங்கள் இந்த சட்டத்திருத்தங்கள் நிறைவேறினால் இனி இருக்காது.
- இதுநாள் வரை காஷ்மீரில் இந்திய தண்டனைச் சட்டம் அமலில் இல்லை. இனி அங்கு இந்திய தண்டனை சட்டம் அமலில் இருக்குமா அல்லது உள்ளூர் ரன்பீர் தண்டனை சட்டம் அமலில் இருக்குமா என்பதை மத்திய அரசோ அல்லது நாடாளுமன்றமோ முடிவு செய்யும்.
- முன்னதாக இருந்த உள்ளூர் பஞ்சாயத்து சட்டங்கள் நீடிக்குமா அல்லது மாற்றம் செய்யப்படுமா என்று இனிதான் முடிவு செய்யப்படும்.
பிற செய்திகள்:
- LIVE ஜம்மு காஷ்மீரை 2-ஆக பிரிக்க மசோதா, 370ன் சிறப்புரிமைகளை ரத்து செய்த குடியரசுத் தலைவர்
- காஷ்மீரில் பதற்றம், ஜம்முவில் ஊரடங்கு: வீட்டு சிறையில் முன்னாள் முதல்வர்கள் ஒமர், மெஹபூபா
- சட்டப்பிரிவு 370 என்றால் என்ன? எப்படி அமலுக்கு வந்தது?
- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ சட்டப்பிரிவு என்ன? 5 கேள்வி - பதில்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்