You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இது வெறும் ட்ரைலர்தான்" - இடைக்கால பட்ஜெட் குறித்து நரேந்திர மோதி
நடுத்தர வர்க்கத்துக்கு பெரும் பயன் அளிப்பதாக 2019 இடைக்கால பட்ஜெட் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இடைக்கால பட்ஜெட் வெறும் ட்ரைலர்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நடுத்தர வர்க்கத்தினர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளில் இருந்து, தொழில் முனைவோரின் மேம்பாடு வரை அனைவருக்கும் இந்த பட்ஜெட் ஏதுவாக இருக்கிறது" என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.
நடுத்தர மற்றும் 'மேல்' நடுத்தர வர்க்கத்தினர் நேர்மையாக வரி செலுத்தியதால்தான், ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
"இந்த பட்ஜெட் ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து, விவசாயிகளை பலப்படுத்தி, தொழிலாளர்களுக்கு மதிப்பளித்து, நடுத்தர வர்க்கத்தின் கனவுகளுக்கு உதவி, வணிகத்தை பெருக்கி, நாட்டின் உள்கட்டமைப்பினை விரைவாக மேம்படுத்த உதவுவதோடு, புதிய இந்தியாவின் கனவுகளை நினைவாக்க சக்தியளிக்கும்" என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகளின் வாழ்வு அழிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க போவதில்லை என்பதால் ஐந்தாண்டுகளுக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய பாஜகவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட், நிதித்துறை அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டதா அல்லது, ஆர்எஸ்எஸ் இதனை தயாரித்ததா என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், இந்த பட்ஜெட்டில் தேர்தல் பிரசாரமும் அடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்