You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரியங்கா காந்தி: "“தேர்தல் என்னை ஈர்க்கும் விஷயமல்ல” என்ற கூறியவரின் அரசியல் பிரவேசம்
காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிக்கு பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து இந்த பணிகளை அவர் கவனிக்க தொடங்குவார் என்றும் அந்த கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1972ஆம் ஆண்டு, ஜனவரி 12 ஆம் தேதி ராஜீவ் காந்தி- சோனியா காந்தி தம்பதிக்கு முதல் குழந்தையாக டெல்லியில் பிறந்தார் பிரியங்கா. டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டம் பெற்றுள்ள அவர், 1997 ஆம் ஆண்டு, தொழிலதிபரான ராபர்ட் வத்ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன.
கடந்த 2004ஆம் ஆண்டு, தனது தாய் சோனியா காந்திக்காக அவர் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பிரியங்காவின் தேர்தல் பிரசாரப் பங்கேற்பு என்பது அவரது 16ஆவது வயதில் ஆரம்பித்தது. அப்போது ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பிரியங்கா காந்தி அடிக்கடி அவரது பாட்டி இந்திரா காந்தியுடன் ஒப்பிடப்படுகிறார்.
அவரது உடை உடுத்தும், பேசும் பாணி , தலைமுடி அலங்காரம் உள்ளிட்டவை இந்திரா காந்தியைபோல அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
''2014 லோக்சபா தேர்தலில் பிரியங்காவை பனாரஸ் தொகுதியில் நிறுத்த காங்கிரஸ் விரும்பியது. ஆனால் நரேந்திர மோதிக்கு எதிராக போட்டியிடும் சிக்கலை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டது என்று ஒரு கட்டுரையில் மூத்த பத்திரிகையாளர் அபர்ணா திவேதி குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தியிடம் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வருவாரா என கடந்த ஆண்டு கேட்கப்பட்டபோது, அரசியலுக்கு வருவது குறித்து பிரியங்கா தான் முடிவு செய்ய வேண்டும் என சோனியா காந்தி கூறினார்.
1999இல் தேர்தல் பிரசாரத்துக்கு இடையே பிபிசியிடம் பேசிய பிரியங்கா, அரசியல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், ` நான் தெளிவாக இருக்கிறேன். அரசியல் என்னை ஈர்க்கும் விஷயமல்ல, மக்கள் தான் என்னை ஈர்க்கிறார்கள். அவர்களுக்கு தேவையான எதையும் என்னால், அரசியலில் இல்லாமலேயே செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.`
முன்னதாக, விரைவில் இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு உத்தரபிரதேசத்தின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் அவர் பொறுப்பேற்றுக்கொள்வார்.
குலாம் நபி ஆசாத், உத்தரபிரதேசத்தின் பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஹரியானா மாநிலத்தில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவுக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக அவர் செயல்படுவார்.
''2014 லோக்சபா தேர்தலில் பிரியங்காவை பனாரஸ் தொகுதியில் நிறுத்த காங்கிரஸ் விரும்பியது. ஆனால் நரேந்திர மோதிக்கு எதிராக போட்டியிடும் சிக்கலை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டது என்று ஒரு கட்டுரையில் மூத்த பத்திரிகையாளர் அபர்ணா திரிவேதி குறிப்பிட்டுள்ளார்''
சோனியா காந்தியிடம் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வருவாரா என கடந்த ஆண்டு கேட்கப்பட்டபோது, அரசியலுக்கு வருவது குறித்து பிரியங்கா தான் முடிவு செய்ய வேண்டும் என சோனியா காந்தி கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்