You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இல்லாதவனுக்கு அதோட அருமை தெரியும்; விஜய்க்காக பேசவேண்டாம்"
தீபாவளி தினத்தன்று வெளியான சர்கார் படத்தில் உள்ள காட்சிகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்த நேயர்களின் கருத்துக்களை பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு வாசகர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். அதன் தொகுப்பை இங்கே காணலாம்.
"விஜய் இதுக்கு போராடாமல் இருப்பது அவர் அரசியலுக்கு வர தகுதியில்லாதவர் என்பதை காட்டுகிறது" என்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார் கிருஷ்ணன் என்ற நேயர்.
"மத்திய அரசின் தணிக்கைக்குழு சான்றிதழ் அளித்த பின்புதானே ஒரு படத்தை பொதுவில் வெளியிடமுடியும்? எதிர்ப்பாளர்கள் போராட வேண்டியது தணிக்கைக்குழுவை! அதைவிட்டு, தயாரிப்பாளர், டைரக்டர், திரையரங்க உரிமையாளர்களை எதிர்த்து என்ன பயன்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார் குலாம் மொஹிதீன்.
"அரசு டிவி,லேப்டாப்லாம் உடைச்சிட்டு பேசுங்கள். இல்லாதவனுக்கு அதோட அருமை தெரியும். விஜய்க்காக பேசவேண்டாம்" என்று கூறுகிறார் சாமி என்ற ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்.
"ஓட்டு பணம் இவர்கள் தருகின்றனர் இது 100% உண்மை தானே. இலவசம் என்ற பெயரில் மக்களை எமாற்றும் மூடச் செயலுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது சர்கார்" என்று பதிவிட்டுள்ளார் நாகராஜ் என்ற நேயர்.
"நிழலை நிழலாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர நிஜமாகப் பார்க்கக் கூடாது. ஒன்றுமில்லாததை ஊதி ஊதி பெரிதாக்கிவிட்டார்கள் அரசியல்வாதிகள்" என்று கருத்து தெரிவித்துள்ளார் சரோஜா சுப்ரமணியன் என்ற நேயர்.
"இது, தேவையில்லாத சர்ச்சை! ஆளுங்கட்சியே போராட்டம் நடத்துவது முரண்பாடு. தமிழகத்தை பொறுத்தவரை இலவசங்களால் பயனடைந்தவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே" என்று பதிவிட்டுள்ளார் ராஜ்குமார் என்ற ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்.
"எதுதான் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கிறது. அவர்களுக்கு மிக்ஸியை எரித்தது பிரச்சினையா, அல்லது டிவியை எரிக்காதது பிரச்சினையா. மக்கள் யாருமே சர்காருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் சில பேர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஏன் விஜய் வாயைத் திறக்கவில்லை?" என்று கருத்து தெரிவித்துள்ளார் சுப்பு லட்சுமி என்ற நேயர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :