2000 ஆண்டுகளுக்கு முன் பல நாடுகளுடன் தொடர்பு: ‘உலகெங்கும் தமிழின அடையாளங்கள்’

சித்தரிப்புக்காக
படக்குறிப்பு, சித்தரிப்புக்காக

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினமலர்: 'உலகின் அனைத்து இடங்களிலும் தமிழகம் சார்ந்த அடையாளங்கள் '

''உலகின் எந்த இடத்திலும், தொல்லியல் சார்ந்த ஆய்வு நடந்தாலும், அங்கு, தமிழகம் சார்ந்த அடையாளங்களை காண முடியும்,'' என, 'பாமா' நிறுவன இயக்குனர், செரியன் பேசினார் என்கிறது தினமலர் நாளிதழ் செய்தி.

சென்னை, தமிழ் இணைய கல்விக் கழகத்தில், தொல்லியல் துறை சார்பிலான, மாதாந்திர கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதை, தமிழக தொல்லியல் துறை ஆணையர், உதயசந்திரன் துவங்கி வைத்தார்.

கீழடி அகழாய்வு புகைப்படம் சித்தரிப்புக்காக
படக்குறிப்பு, கீழடி அகழாய்வு புகைப்படம் சித்தரிப்புக்காக

'தமிழகத்தின் பண்டைய துறைமுக நகரமான முசிறி பட்டணம் ஒரு மீள் பார்வை' என்ற தலைப்பில், கேரள தொல்லியல் துறை முனைவரும், 'பாமா' நிறுவன இயக்குனருமான, செரியன், "கேரள பட்டணம் என்ற இடத்தில் நடத்திய அகழாய்வில், செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியுடன் இருந்த, கடல் கடந்த தொடர்புக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அவை, முசிறி பட்டணமாக இருக்கலாம். இது, சீன, அரேபிய தொடர்புடைய மிகப்பெரிய வணிக மையமாக இருந்துள்ளது.முசிறி பட்டணத்தில், சுட்ட செங்கற்களாலான கட்டடங்கள், 'ரூலட்டட்' என்ற துண்டுகள், 'ஆம்போரா' ஜாடி துண்டுகள், ரோமானிய சிவப்பு வகை ஓடுகள், உயர்வகை கற்களாலான மணிகள் இருந்தன. இது, ஒரு நகரத்துக்கான சான்றுகள்.முசிறி துறைமுகம் வீடுகளும், ரோமானிய முறையில் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை, 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டி உள்ளனர்.துறைமுக வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் திறன், முசிறி பட்டணத்திற்கு இருந்துள்ளது. உலகின் எந்த இடத்தில் தொல்லியல் சார்ந்த ஆய்வு நடந்தாலும், தமிழகம் சார்ந்த அடையாளங்களை காண முடியும்" என்று அவர் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இலங்கை
ரஜினி

பட மூலாதாரம், இந்து தமிழ்

இலங்கை
இலங்கை

தினமணி: 'கரு' ஒன்று 'கதை' வேறு - விளக்கும் ஏ. ஆர் முருகதாஸ்

சர்கார் திரைப்பட கதை சர்ச்சை தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும், உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்தி பிரதானமாக தினமணி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

'கரு' ஒன்று 'கதை' வேறு - விளக்கும் ஏ. ஆர் முருகதாஸ்

பட மூலாதாரம், Facebook

"சர்கார் திரைப்பட கதை குறித்து வருண் ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதை செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதிய கதையாகும். இந்த கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். எனது கதையை சர்கார் என்ற பெயரில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படமாக இயக்கி உள்ளார். இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தேன். இந்த புகாரை விசாரித்த சங்கத்தின் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ், இரண்டு கதைகளும் ஒரே கதையாக உள்ளதாக தெரிவித்தார்.

எனவே, சர்கார் திரைப்படத்தின் கதை என்னுடையது என அறிவிக்க வேண்டும். இந்த படத்தை திரையிடும் போது கதை ஆசிரியர் என எனது பெயரை (வருண் ராஜேந்திரன்) திரையிட உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சர்கார் திரைப்படத்தின் கதை குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் கே.பாக்யராஜ், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அப்போது முருகதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், சர்கார் படத்தின் கதை குறித்து இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டது எனக் கூறி, சமரச ஒப்பந்த மனுவை தாக்கல் செய்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் எம்.புருஷோத்தமன் ஆகியோர் ஆஜராகினர். இந்த சமரச ஒப்பந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுந்தர், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்." என்கிறது அந்நாளிதழ். .

"நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சமரச ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த உரிமையைப் பறிக்கும் வகையில், ஒருவரின் வாக்கை முறைகேடாக மற்றொருவர் செலுத்துவது நாட்டு நலனுக்கு கேடு. இவ்வாறு வாக்குரிமையை இழந்த ஒரு நாயகன் எப்படி போராடி நீதியை நிலைநாட்டுகிறான் என கற்பனையாக எனக்கு (ஏ.ஆர்.முருகதாஸ்) தோன்றிய கதையை சர்கார் என்ற திரைப்படமாக இயக்கியுள்ளேன். இதே கதை கரு, உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கும் தோன்றியுள்ளது. மேலும், அவர் எனக்கு முன்பே அந்த கதையை சங்கத்தில் பதிவு செய்துள்ளார். எனவே, வளர்ந்து வரும் கலைஞராகிய அவரது உழைப்பை கெளரவிக்கும் வகையில், இந்த வாசகங்கள் திரைப்படம் தொடங்கும் முன் 30 விநாடிகளுக்கு குறையாமல் திரையிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது." என்று விவரிக்கிறது.

சர்கார்-செங்கோல் கதைகளின் கரு மட்டும்தான் ஒன்றே தவிர, மற்றபடி இது தன்னுடைய கதை தான் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார் என்று கூறும் அந்நாளிதழ் செய்தி, "தேர்தலில் ஒருவரின் வாக்கை கள்ள வாக்காகப் போட்டுள்ளனர் என்பதுதான் சர்கார் படக் கதையின் கரு. அந்தத் துளி மட்டும்தான் இவ்விரு கதைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமை. மற்றபடி சர்கார் கதைக்கும், செங்கோல் கதைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால், நமக்கு முன்பு ஒரு உதவி இயக்குநர் கதையைப் பதிவு செய்து வைத்துள்ளார். அவரைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், படத்தின் பெயரை போடுகையில், திரையில் அவர் பெயரையும் போடச் சொன்னார்கள். அதற்கு நான் ஒப்புக் கொண்டேன். மற்றபடி, இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ்தான். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது என அந்தப் பதிவில் முருகதாஸ் தெரிவித்துள்ளார்." என்கிறது.

இலங்கை

இந்து தமிழ்: 'தமிழகம் முழுவதும் ஒரே நாளில் கர்ப்பிணி உட்பட 8 பேர் மரணம்'

தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"கோவை அரசு மருத்துவ மனையில் வைரஸ் காய்ச்சல் காரணமாக மொத்தம் 57 பேர் அனுமதிக்கப் பட்டுள்ளனர். பன்றிக் காய்ச்சலுக்கு 8 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த சமத்தூரைச் சேர்ந்த நாகராஜ்-ரத்தினம் தம்பதியின் மகன் சஞ்சய் (8), காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் சஞ்சய் நேற்று உயிரிழந்தான்." என்கிறது அந்த செய்தி.

YouTube பதிவை கடந்து செல்ல, 3
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 3

"வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீராங்குப்பம் ஊராட்சி ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் குண சேகரன் (32). இவரது மனைவி வினோதினி (25). இவர்களுக்கு பிரனீஷ் (2)என்ற மகன் உள்ளார். வினோதினி தற்போது 7-மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வினோதினி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப் பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் வினோதினி உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்தது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'நினைவிருக்கிறதா சட்டக் கல்லூரி தாக்குதல்? - அனைவரும் விடுதலை'

'நினைவிருக்கிறதா சட்டக் கல்லூரி தாக்குதல்? - அனைவரும் விடுதலை'

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் இரு தரப்பினர் சமரசம் செய்து கொள்ள அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று தேவர் ஜெயந்தி விழாவிற்கு போஸ்டர் அடிக்கும் பிரச்சனையில், செப்டம்பர் 11 அம்பேத்கர் சட்ட கல்லூரியின் மாணவர்களில் இருத்தரப்பினருக்கு இடையில் வன்முறை வெடித்தது.

விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், கல்லூரிக்கு தங்கள் வீட்டிலிருந்து வந்து செல்லும் மாணவர்கள் வேண்டுமென்றே போஸ்டரில் அம்பேத்கரின் பெயரை அச்சு செய்யவில்லை என குற்றம் சாட்டினர்.

பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தினுள்ளே சண்டையிட்டதை தொலைக்காட்சியில் பார்த்த மக்கள் மத்தியில் அச்ச உணர்வும், மாணவர்கள் குறித்த கவலைகளும் எழுந்தன என்று விவரிக்கிறது அந்த செய்தி.

YouTube பதிவை கடந்து செல்ல, 4
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :