எதிர்ப்புகளுக்கு மத்தியில் 'ஒற்றுமை' சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உலகின் உயரமான சிலை இன்று பிரதமர் மோதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

'ஒற்றுமைக்கான சிலை' (Statue of Unity) என்று அழைக்கப்படும் அந்த 182 மீட்டர் உயர சிலை, குஜராத்தின் சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.

சிலைக்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த பழங்குடி இனமக்கள் பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், இன்று பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோதி திறந்து வைத்துள்ளார்.

உலகின் மிக உயரமான இந்த சிலை 3000கோடி செலவில் கட்டமைக்கப்பட்டது.

இந்த சிலையை தேசத்துக்கு அர்பணிப்பதாக சிலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோதி தெரிவித்தார்

இந்த தினம், இந்திய வரலாற்றில் நினைவு வைத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பலர், இந்தியா போன்ற பல வேற்றுமைகள் நிறைந்த நாடு ஒற்றுமையாக இருக்க இயலாது என கருதினர்; ஆனால், சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியா ஒற்றுமையாக இருக்க இயலும் என்ற வழியை காட்டியவர் என்றும் அவர் தெரிவித்தார்.

"படேல் மட்டும் இல்லை என்றால், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு ரயில் விட்டுருக்க முடியாது" என்று மோதி பேசினார்.

இந்திய சுதந்திரத்துக்கு பின் சண்டையிட்டுக் கொண்டிருந்த மாநிலங்களை ஒன்றிணைத்ததாக சர்தார் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கட்டப்பட்டுள்ளது இந்த சிலை.

படேலின் இந்த வெண்கல சிலை அமைக்கும் பணி 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மேலும், இது பிரதமர் மோதிக்கு மிக நெருக்கமான திட்டமாக பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: