You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகெங்கும் வைரலாகும் கிகி சேலஞ்ச் - எச்சரிக்கும் காவல்துறை #KiKiChallenge
அமெரிக்கா, மலேசியா, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும், ஆசியாவிலும் இணையதள வாசிகளிடையே வைரலாகி வரும் ’கிகி சேலஞ்ச்’ , இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது எனவே இதனால் ஏற்படும் அபாயங்களையும், இதனை செய்ய வேண்டாம் என்றும் உத்திர பிரதேசம், மும்பை, பஞ்சாப் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கிகி சேலஞ்ச் என்றால் என்ன?
’KIKI, Do you love me?’ என தொடங்கும் இந்த பாடலை பாடி எழுதியது டிரேக் (Drake). இவர் கனடா நாட்டின் பிரபல ராப் பாடகர் ஆவார். அது மட்டுமல்லாமல் பாடலாசிரியர், நடிகர் என பல துறைகளில் உலகளவில் பிரபலமானவர் ட்ரேக்.
மில்லியன் கணக்கில் ரசிகர்களை கொண்ட இவர், சமூக ஊடகங்களிலும் மிகவும் பிரபலமானவர்.
டிரேக் எழுதி சமீபத்தில் வெளியான கிகி பாடல், நல்ல வரவேற்பை பெற்றது. இன்ஸ்டாகிராமில் இதற்கு நடனமாடிய ஷிகி என்னும் பிரபல காமெடியன், இந்த பாட்டினை மேலும் வைரலாக்கினார்.
காரில் டிரேக்கின் கிகி பாடல் ஒலிக்க, ஓடும் காரிலிருந்து வெளியே குதுத்து டிரேக் பாடலுக்கு ஆட வேண்டும் அதை காரிலிருப்பவர் உள்ளிருந்த படியே பதிவு செய்வார். அதுதான் கிகி சேலஞ்ச்.
இந்தியாவில் கிகி சேலஞ்ச்
கிகி சேலஞ்ச் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இந்தப் பாட்டிற்கு நடனமாடி வருகின்றனர்.
கிகி சேலஞ்ச் செய்யும் நடிகை ரெஜினா கசான்ட்ரா
விபரீதத்தில் முடியும் சேலஞ்ச்
இவ்வாறு காரைவிட்டு இறங்கி திடீரென நடனமாடுவது சில சமயங்களில் விபத்துகளில் முடிகிறது. காரைவிட்டு இறங்கும்போது கீழே விழுவது, நடனமாடும்போது விழுவது என இந்த சேலஞ்ச் விபரீதத்தில் முடிகிறது.
ஃபேஸ்புக்கில் பரவி வரும் இந்த காணொளியில், பெண் ஒருவர் சாலையில் நடனமாடி கொண்டிருக்கும்போது, வேகமாக வரும் கார் ஒன்று அவரை இடித்து செல்கிறது.
மற்றொரு காணொளியில் நடனமாட காரை விட்டு இறங்கும் போதே ஒரு பெண் கீழே விழுகிறார்.
எச்சரிக்கும் காவல்துறை
இந்நிலையில், கிகி சேலஞ்சை ஏற்க வேண்டாம் என்று உத்தர பிரதேச காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "உங்கள் குழந்தைகளை கிகி காதலிக்கவில்லை ஆனால் பெற்றோர்களாகிய நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும். உங்கள் குழந்தைகளை இதை செய்ய வேண்டாம்" என்று வலியுறுத்துங்கள் என அதில் பதிவிடப்பட்டுள்ளது.
ஜெய்பூர் காவல்துறையினரும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :