You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கைலாஷ் - மானசரோவர் பயணம்: புகைப்படங்களும், சுவாரஸ்ய தகவல்களும்
மேற்கு நேபாளம் ஹும்லா வழியாக கைலாஷ் மானசரோவர் செல்லும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் உயர்ந்துள்ளது.
இந்த பாதையில் யாத்ரீகர்கள் தரிசிக்கும் காட்சிகள் ரம்மியமானதாக இருக்கின்றன, பனி சிகரங்கள், மலைகள், பாதையில் தென்படும் ரிஷிகள் என இந்த வழியிலான பயணம் காலத்திற்கும் மனதில் பூட்டிவைத்துக் கொள்வதற்கான அழகிய நினைவுகளை வழங்குகிறது.
அந்த பாதையில் புகைப்பட கலைஞர் கிருஷ்ணா அதிகரை தரிசித்த சில காட்சிகளை இங்கே வழங்கி இருக்கிறோம்.
அந்த புகைப்படத்துடன் மானசரோவர் குறித்த தகவல்களையும் வழங்கி உள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு செல்கின்றனர்.
கடந்த ஆண்டு நேபாளம் வழியிலான பயணத்தை 12,000 பேர் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். இந்த ஆண்டு இதுவரை மட்டும் 6000 பேர் இந்த வழியாக மானசரோவர் சென்று இருக்கிறார்கள்.
உயர்ந்த மலைகளை கடந்து இப்பாதை வழியாக மானசரோவர் செல்வது மிகவும் சவாலான விஷயம்.
சிவன் வாழும் இடம் கைலாஷ் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை. கடல் மட்டத்திலிருந்து 6,638 மீட்டர் உயரத்தில் அமைந்து இருக்கிறது.
இந்து புனித நூல்களில் கைலாஷ் மானசரோவர் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மானசரோவர் செல்வதற்கு மூன்று பாதைகள் உள்ளன. அதில் ஒன்று நேபாளம் வழியான இந்த பாதை.
இந்திய யாத்ரீகர்கள் மானசரோவர் செல்ல குறைந்தது 1,60,000 ரூபாய் செலவிடுகிறார்கள். மேற்கத்தியர்கள் 3500 அமெரிக்க டாலர்கள் செலவிடுகிறார்கள்.
மானசரோவர் செல்ல சரியான காலம் எப்ரல் முதல் அக்டோபர் இடையிலான காலம்தான். ஆனால், பயணிகள் அக்டோபர் இறுதிவரை மானசரோவர் செல்கிறார்கள்.
மானசரோவர் ஏரிக்கு செல்வது முக்தி அடைவதற்கான வழியாக பார்க்கப்படுகிறது.
மானசரோவர் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய யாத்ரீகர்கள். அவர்கள் முதலில் காத்மண்டுவிலிருந்து நேபாள்குஞ் செல்வார்கள். அங்கு ஓர் இரவு தங்குகிறார்கள்.
நேபாள்குஞ்சிலிருந்து 45 நிமிட பயணத்தில் சிமிகோட் சென்றுவிடலாம்.
சிமிகோட்டில் சிறிய ரக விமானத்தில் ஹில்சா சென்று அங்கிருந்து மோட்டார் வாகனத்தில் திபெத் டக்லாகோட் செல்லலாம். அங்கிருந்துதான் மானசரோவருக்கான உண்மையான பயணம் தொடங்குகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்