இது ஹாலிவுட் செட் இல்லை; சீனாவின் 'பேய் கிராமம்'

சீனாவின் கிழக்கே, ஜேஜியாங் பிராந்தியத்தில் அமைந்துள்ளது ஷெஹ்ஷான் தீவு. இந்த தீவில் அமைந்திருக்கும் ஹுடோவன் கிராமத்தில் தற்போது ஒரு சிலர் மட்டுமே வசிக்கின்றனர்.

இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் இங்கே புல்வெளிகளும், மலைமுகடுகளும் கண்ணை கவர்கின்றன. வீடுகள் மற்றும் கட்டடங்களின் மீதும் செடிகளும், கொடிகளும் படர்ந்து, ஆக்கிரமித்து பார்க்கும் இடமெல்லாம் பசுமையாய் காட்சியளிக்கின்றன.

ஹாலிவுட் திரைப்பட செட்டைப் போன்று தோன்றும் இந்தப்பகுதி, திகிலூட்டும் இடமாக காட்சியளிக்கிறது.

இந்த பகுதிக்கு சென்ற AFP செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் ஜொஹான்னெஸ் எஜெலே, காணக்கிடைக்காத இந்த காட்சிகளை புகைப்படமாக சிறைபிடித்தார்.

ஒரு காலத்தில் 500 வீடுகளை கொண்டிருந்த இந்த கிராமம் மிகவும் உற்சாகமாக இருந்தது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான மீனவ குடும்பங்களும் இங்கு வசித்துவந்தனர்.

ஆனால் தீவு மிக பிரதான இடத்திலிருந்து மிகத் தொலைவில் இருந்தது, இங்கு கல்வி வசதி குறைவாக இருந்த்து. பொருட்களை கொண்டு வருவதிலும், போக்குவரத்து சிக்கல்கள்களும் இருந்தன.

வசதிகளைத் தேடி1990 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பல குடும்பங்கள் இங்கிருந்து பிற இடங்களுக்கு புலம்பெயர்ந்தன.

1994ஆம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களும் இங்கிருந்து வெளியேற, தற்போது ஒரு சிலர் மட்டுமே இங்கே வாழ்கின்றனர்.

மனிதர்கள் வீட்டை காலி செய்தால் என்ன? கடந்த சில ஆண்டுகளாக இயற்கை இங்குள்ள வீடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. புல், இலை, செடி, கொடி என இங்கிருக்கும் புழங்காத எல்லா வீடுகள் மற்றும் கட்டடங்களின் ஒவ்வொரு மூலையிலும் முளைத்தன.

மனிதர்கள் வசிக்க விரும்பாமல் வெளியேறின இந்த இடம், இயற்கையின் கைவண்ணத்தால் தற்போது மனிதர் விரும்பி தேடி வரும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: