2019 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை அறிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து, தமிழக அரசு ஒரு குழுவினை அமைத்திருந்திருந்தது. அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், தமிழக முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு மட்டும் இதி்ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்களால், மழை நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுவதாகவும், கழிவு நீர் பாதைகளும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதாகவும் முதல்வர் கூறினார்.

பிளாஸ்டிக் தாள், தட்டு,கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் துணிப்பைகள், காகித பைகள் பயன்படுத்துமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: