எடியூரப்பாவுக்கு சோதனை: இன்று எப்படி நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு?

    • எழுதியவர், நிதின் ஸ்ரீவத்சவா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவ்வாறு அது நடைபெறும்? அதன் நடைமுறை என்ன?

1. அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை, சட்டப்பேரவை செயலாளர் அடையாளம் காட்ட வேண்டும்.

2. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏவை, இடைக்கால சபாநாயகராக சட்டப்பேரவை செயலாளர் முன்மொழிவார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணமும் செய்து வைப்பார்.

3. எம்.எல்.ஏக்கள் அனைவரும் உறுதி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்புவிடுக்குமாறு இடைக்கால சபாநாயகர் சட்டப்பேரவை செயலரை கோருவார்.

4. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொள்வது என்பது ஒரு நீண்ட நெடிய நடைமுறையாகும். இதற்கு, உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடுவான மாலை 4 மணிக்கு மேல் ஆகலாம். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார், "இதுபோன்ற தருணங்களில் ஆளுநரின் கடிதத்தை விட உச்சநீதிமன்ற உத்தரவைதான் மதிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

5. எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா முடிந்தவுடன்...

அ. நம்பிக்கை வாக்கெடுப்பை இடைக்கால சபாநாயகர் நடத்தலாம்

ஆ. புதிய சபநாயகர் தேர்ந்தெடுக்கப்படலாம்.

6. முதலில் பொதுவாக சபையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். பின்பு கதவுகள் மூடப்படும் அதன் பின் ஆதரவு மற்றும் எதிர் தரப்பினர் தங்கள் வாக்குகளை தனித்தனியாக வெளிப்படுத்த வேண்டும்.

7. இந்த நடைமுறைகள் முடிந்தவுடன் முடிவுகளை சபாநாயகர் அறிவிப்பார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: