பிரிட்டன் நச்சுத் தாக்குதல்: ரஷ்ய உளவாளிக்கு சிகிச்சை முடிந்தது

பிரிட்டனில் கடந்த மார்ச் 4 அன்று நச்சுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, மயங்கிய நிலையில் கண்டறியப்பட்ட முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளார்.

66 வயதாகும் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர் நோவிசோக் எனும் நச்சு வேதிப்பொருள் மூலம் தாக்குதலுக்கு உள்ளானர்.

அவர்கள் இருவரும் சேலிஸ்பரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஏப்ரல் 9 அன்று மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய யூலியா பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிப்பது மிகப்பெரிய மற்றும் இதற்கு முன்பு கண்டிராத சவாலாக இருந்ததாக அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையின் இயக்குநர் லோர்னா வில்கின்சன் கூறியுள்ளார்.

ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார்.

செர்கெய் மற்றும் யூலியா மீது தாக்குதலுக்கு பிரிட்டன், ரஷ்யா மீது குற்றம் சுமத்தியது. சாலஸ்பரி தாக்குதலில் தாங்கள் ஈடுபடவில்லை என ரஷ்யா மறுத்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: