கர்நாடக தேர்தல்: பாஜகவுக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு முடிவுகள்
கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு இன்று நடைபெற்ற வாக்குப்பதிவைத் தொடர்ந்து முன்னணி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பான்மையான கணிப்புகள் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட பாரதிய ஜனதா கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக விளங்குகிறது.
இரண்டு கருத்துக்கணிப்புகளே காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளன. எனினும் அதில் ஒன்றில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி அமைக்க போதுமான இடங்களைப் பிடிக்கும் என்று கூறுகிறது.
வெளியாகியுள்ள அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாவது இடத்தையே பிடிக்கும் என்று கூறுகின்றன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு இன்று நடந்த வாக்குபதிவில் 70% வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க வுக்கு இது முக்கியத் தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. கர்நாடகவில் இதுவரை ஒருமுறை மட்டுமே வெற்றிப் பெற்றுள்ள பா.ஜ.கவுக்கு தற்போது தென் இந்தியாவில் பெரிய இருப்பு இல்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












