You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கல்வீச்சு: விரக்தியால் மனிதாபிமானத்தை இழக்கிறார்களா காஷ்மீர் இளைஞர்கள்?
- எழுதியவர், அனுராதா பாசின் ஜம்வால்
- பதவி, பிபிசிக்காக
காஷ்மீரின் புட்காம் பகுதியில் கடந்த மே ஏழு அன்று கடுமையான கல் வீச்சு தாக்குதல் சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி படுகாயமடைந்து இறந்தார். மேலும் ஒரு உள்ளூர் சிறுமியும் காயமடைந்துள்ளார்.
இந்நிகழ்வு அதிர்ச்சியளித்துள்ளது. காஷ்மீரின் விருந்தோம்பலுக்கு இது எதிரானது என ஒருமித்த கருத்துடன் அனைவரும் இந்நிகழ்வை விவரித்தனர். மேலும், முக்கிய அரசியல்வாதிகள், ஹுரியத் மற்றும் சிவில் சமூகம் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன
பெரும்பாலும், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கல்வீச்சு தாக்குதலில் இலக்காக இருப்பதில்லை ஆனால், பெருங்கோபம் கொண்ட வன்முறைக்கு எல்லைகள் தெரியாது. அது அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இது போன்ற ஆர்ப்பாட்டங்களின் கொடூர இயல்பினை மறுக்கமுடியாது.
ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் தொடர் வன்முறைகள், கிளர்ச்சியாளர்கள் தாக்குதல், என்கவுன்ட்டர், ஆர்ப்பாட்டம், ஊரடங்கு உத்தரவுகள், கடையடைப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சுற்றுலா துறையில் இந்நிகழ்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். காஷ்மீரின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இல்லையென்றாலும்கூட சுற்றுலா மிகவும் முக்கியமான வருமானம் தரும் பொருளாதாரத்துறையாகும்.
தொடர் போராட்டங்களால் தினசரி வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம் போன்றவை பெறுவதற்கு மக்கள் சிரமமடைகிறார்கள். மேலும் இவற்றை பெறுவதற்கு உடல் ரீதியான அபாயங்களை சந்திக்கிறார்கள். இப்போராட்டங்களால் மாணவர்கள் வகுப்பறையை விட்டு அடிக்கடி வீதிக்கு வருகிறார்கள். மேலும் அவர்கள் கற்களுடன் காணப்படுகிறார்கள்.
கல்லூரி மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் தொடர்ச்சியாக தெருவுக்கு வருகிறார்கள். மோதலில் பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தோட்டாக்கள் மற்றும் சிறு குண்டுகள் மூலம் கொடூரத் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்துள்ளனர்.
2016-க்கு பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வன்முறை பசி அதிகரித்துக் காணப்படுகிறது. போருக்கு தயாராக இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு படைப்பிரிவிடம் இருந்து கிளர்ச்சியாளர்களை காக்கும்பொருட்டு பதில் தாக்குதல் நடத்த துவங்கியதாக செய்தியை கேட்டவுடன் ஆயுதமற்ற மக்கள் அருகிலுள்ள கிராமத்திற்கு தப்பிச் செல்லத் துவங்கிவிடுகிறார்கள்.
சில படித்த ஆண்களும் திறத்தொழிலர்களும் கூட கிளர்ச்சியாளர் அணியில் சேர்ந்துள்ளனர். மேலும் தினசரி திடீர் பதில் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கூட கிளர்ச்சியாளர் அணியில் சேர்பவர்க்ளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சமீப வருடங்களில் தெருவில் இறங்கி போராடுவது காஷ்மீரில் வழக்கமான ஒன்றாகி விட்டது. காஷ்மீரி இளைஞர்களின் கையில் இருக்கும் பிரபலமான ஆயுதமாகிவிட்டது கற்கள்.
மரணத்தைச் சந்திப்பதற்கு வேண்டுமென்றே களத்திற்குச் சென்று, மோதலில் பீரங்கி ஆயுதங்களுக்கு இரையாகும் இவர்களின் விரக்தியை புரிந்துக்கொள்ளாமல் 2008-க்கு பிறகு ஏன் இப்பெருங்கோபம் குருட்டுத்தனமாக வெடித்துள்ளது என புரிந்து கொள்வது கடினமானது.
கல் எறிதல் என்பது ஒரு நோய் அல்ல. ஆனால் வரலாறு மற்றும் அரசியல் ரீதியாக காரணங்களை கொண்டிருக்கும் ஆழமான கடும் வன்முறைக்கான ஒரு அறிகுறி.
ஆகவே கல் வீச்சு சம்பவத்துக்கு வெறுமனே கண்டனம் தெரிவிப்பது போதுமானது அல்ல. கேள்வி என்னவெனில், ஏன் மக்கள் தெருவுக்கு கட்டாயமாக வந்து போராடுவதற்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதும் தோட்டா மற்றும் குண்டுகளால் கடுமையாக தாங்கள் பாதிக்கப்படுவோம் எனத் தெரிந்தும் இறங்கி போராடுகிறார்கள்? நிச்சயமாக, பணத்திற்கு ஆசைப்பட்டு மரண பயமின்றி இவர்கள் இந்த சம்பவங்களில் ஈடுபடுவதில்லை.
தெருக்களில் காணப்படும் இக்கோபங்கள் வளர்ந்ததற்கான தண்டுகள், நிறைவேறாத அரசியல் அபிலாஷைகள் மற்றும் அரசியல் சர்ச்சைகளில்
உள்ளன. அதிகப்படியான ராணுவ மயமாக்கல், தொடர் மனித உரிமைகள் மீறல் மற்றும் அமைதியாக போராட்டம் நடத்துவதற்கான வழிகளை அடைத்தது ஆகியவையே இக்கோபங்களுக்கு எரிபொருளாக அமைந்தன.
காஷ்மீர் இளைஞர்கள் நிலையான வன்முறையால் மனிதாபமானவற்றவர்களாக மாறி வருகின்றனர். மேலும், தேசிய அளவில் கவனம் பெறாத மிருகத்தனமான கொடுமைகளுக்கு அடிக்கடி ஆளானவர்களாவும் இருக்கின்றனர்.
கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்று கூறி அதோடு சம்பந்தம் இல்லாதவர்களை வீடு புகுந்து கைது செய்வது, அவர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது போன்ற பாதுகாப்பு படையினரின் சட்ட நடைமுறைகளை மீறிய செயல்பாடுகள் இளைஞர்களை இன்னும் போராட தூண்டுகிறது.
மத தீவிரமயமாக்கல் அவர்களுக்கு மேலும் போராட்டத்தில் ஈடுபடுவதற்குரிய தைரியத்தை அளிக்கிறது. நடைமுறைச் சீர்குலைவுகளால் அதிகமானோர் உயிரிழப்பதால், இளைஞர்களின் அதிருப்தி உச்சத்தை அடைந்து, சீருடையிலுள்ள படையினரை கண்டால் அவர்களை தங்களது மெய்நிகர் எதிரிகளாக நினைத்து கல்வீசி போராடுவதற்கு தூண்டுகிறது.
இந்த மோசமான சுழற்சியை இதற்கான மூலக் காரணத்தை சரிசெய்வதன் மூலமாகத்தான் உடைக்க முடியும். பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம், இராணுவ வழிமுறைகளால் மட்டுமே கிளர்ச்சியை நசுக்க முடியும் என்று நம்புகிறது; எதிர்கால உரையாடல் செயல்முறையை கட்டமைக்கக்கூடிய நம்பிக்கை அடிப்படையிலான விடயங்களை உருவாக்கும் முயற்சியில் அது ஈடுபடவேயில்லை.
'இந்துத்வ' அரசியலை இந்தியா முழுவதும் முன்னிறுத்தும் பாஜக, அதை முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ள காஷ்மீரில் நுழைக்கும் செயற்பாடு அங்கு ஏற்கனவே நடைபெற்றுவரும் போராட்டங்களை தீவிரப்படுத்துவதுடன், மக்களை 'விடுதைலையை' நோக்கி மேலும் உந்தித் தள்ளுகிறது.
இந்நிலையில், கல்வீச்சு சம்பவத்தில் சுற்றுலாப் பயணி ஒருவர் மரணமடைந்ததுள்ளது, அதன் வரம்புகள் மற்றும் குறைபாடுகளை எதிர்ப்பதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவதை பற்றி விவாதிப்பதற்குரிய ஒரு சிறந்த நேரமாகும்.
பல திறமைவாய்ந்த காஷ்மீரிகள் இதற்கு இணையான தங்களது எதிர்ப்பை எழுத்து, ஓவியம், சிறியளவிலான ஆலோசனை கூட்டங்கள், பாடல்கள் மூலக பதிவு செய்கின்றனர்.
காஷ்மீர் இளைஞர்களை விரக்தியடைந்த நிலைக்கு இட்டுச்சென்ற துன்பகரமான மற்றும் கட்டாய காரணங்கள் குறித்தும், அரசாங்கம் தனது ராணுவத்தை பயன்படுத்தும்போது மனிதநேயத்தையும் மற்றும் அரசியல் ரீதியான விடயங்களையும் கவனத்தில் கொள்வதற்கு அழுத்தத்தை அளிப்பதன் அவசியத்தையும் காஷ்மீருக்கு வெளியிலுள்ள சமூகம் அறிந்துகொவதற்கான தேவையுள்ளது. அது நடக்கவில்லை என்றால், இந்த மோசமான மற்றும் தாங்கமுடியாத வன்முறைகளில் சிக்கி காஷ்மீர் தவிக்க வேண்டியிருக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்