You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரசியல்வாதிகளுக்கு கொடுக்க பெங்களூரு மக்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை
எல்லா தேர்தல்களிலும் மக்களின் விலைமதிப்பில்லாத வாக்குகளை கேட்டு தேர்தல் அறிக்கையோடு அரசியல்வாதிகள் உங்கள் வீட்டுக் கதவுகளை தட்டுவர்.
மக்கள் தங்களுடைய தேர்தல் அறிக்கையை அரசியல்வாதிகளிடம் வழங்கியதை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?
அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலையெட்டி பெங்களூரு நகரவாசிகள் இதனை செய்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளிடம் வழங்குவதற்கு இந்த நகர மக்கள் சார்பில் குடிமக்கள் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
"சிட்டிசன்ஸ் ஆப் பெங்களூரு" என்ற குழுவொன்று இந்த நகரத்தின் பல்வேறு நிலைகளிலுள்ள மக்களை ஒன்றாக கூடிவரச் செய்து, அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளை விவாதித்து இந்த தேர்தல் அறிக்கையை உருவாக்கியுள்ளது.
முழுமையான விவாதங்களுக்கு பின்னர், "பெங்களூருக்கு இவை தேவைப்படுகின்றன" என்று பொருள்படும் வகையில் "பெங்களூரு பெக்கு" என்கிற தலைப்பில் இந்த தேர்தல் அறிக்கையை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.
கொள்கைகளை வகுக்கும்போது அனைவரையும் உள்ளடக்கித் திட்டமிடுவோர் தேவைப்படும் நிலையில், மாசுபாட்டை அதிகரிக்க செய்யும் சாலை போக்குவரத்து முதல் கழிவு மேலாண்மை வரையான பிரச்சனைகளை இந்த அறிக்கை முக்கியமாக குறித்து காட்டுகிறது.
பெங்களூருரில் வசிப்பவரும், இந்த கூட்டு முயற்சியில் பங்கேற்றவருமான டாக்டர் அர்ச்சனா பிராபாகர் பிபிசியிடம் இது பற்றிக் கூறுகையில் "தேர்தலுக்கு சற்று முன்னதாக வாக்கு கேட்டு அரசியல்வாதிகள் வருகின்றனர். நமக்காக அவர்கள் செய்துள்ள வேலைகளை நினைவூட்டும் ஒரே நேரம் இதுதான். ஆனால், அவர்களின் கடந்த 5 ஆண்டுகால பொறுப்பில் இந்தப் பணிகள் நிறைவேற்றப்படுவதில்லை. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் சிலவற்றை நிறைவேற்ற அவர்கள் அவசரப்பட்டு முயல்கின்றனர். துரதிஷ்டவசமாக அத்தகைய அரசியல்வாதிகளுக்கு நம்முடைய வாக்குகளை அளிக்கின்ற நிலைமையில் நாம் உள்ளோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
மக்களின் கோரிக்கைகளை அரசியல்வாதிகளிடம் கொண்டு சென்று, அந்த கோரிக்கைகளை ஏற்க செய்கின்ற தனிச் சிறப்புமிக்க முயற்சிதான் இந்த குடிமக்களின் தேர்தல் அறிக்கைளை வெளியிடுவதன் நோக்கமாகும்.
அரசியல்வாதிகளுக்கான "மக்களின் தேர்தல் அறிக்கை" என்று இதனை அர்ச்சனா கூறுகிறார்.
குப்பைகள், துப்புரவு, பாதசாரிகளின் உரிமைகள், மாசுபாடு, வீட்டு வசதி, மக்கள் கூடுவதற்கான பொது இடங்கள், மேம்பட்ட நிர்வாகம் உள்ளிட்ட 13 பிரச்சனைகள் இந்த குடிமக்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
"குடிமக்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள் என்பதை அரசியல்வாதிகள் அறிந்திருக்க வேண்டும். நம்முடைய உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும் நம்முடைய உரிமைதான். அதேவேளையில் அரசு நமக்கு உதவுவதற்கு குடிமக்களான நாம், நம்மால் இயன்றதை செய்ய முன்வர வேண்டும்" என்று புன்னகையோடு தெரிவிக்கிறார் அர்ச்சனா.
கடந்த தேர்தல் வரை, தேர்தலிலும், அரசியல்வாதிகளிடமும் நல்லெண்ணம் கொண்டிருந்த்தாக அர்ச்சனா கூறியுள்ளார்.
"ஆனால், அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டுவதும், குறைகூறுவதும் எளிதான செயல் என்றும், தீர்வு காண்பதில் பங்கேற்பது சவால் மிகுந்தது பயனும் அளிக்கிறது" என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.
அரசியல்வாதிகளுக்கு தேர்தல் பணியாற்றுவோர் வீடுகளுக்கு வந்தபோது, குடிமக்கள் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வழங்கியதைப் பார்த்து அவர்கள் குழம்பி போய்விட்டனர். அரசியல்வாதிகளின் "பரவாயில்லை" என்று பொருள்படும் "சல்தா ஹாய்" என்கிற மனப்பான்மையில் மக்கள் மகிழ்சியாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்" என்று அர்ச்சனா பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், அர்ச்சானா, அவரது கணவர் மற்றும் பெங்களூரு குடிமக்கள் குழுவினர், எல்லா அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கு சென்று இந்த குடிமக்களின் தேர்தல் அறிக்கையை சமர்பித்துள்ளனர்.
கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இதில் எத்தனை பிரச்சனைகள் உண்மையிலேயே உள்வாங்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தேர்தலை முன்னிட்டு ஏதாவது செய்திகளை பிபிசி வெளியிட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறாகளா?
#BBCNewsPopUp and #KarnatakaElections2018 கேஷ்டேக்குகளை பயன்படுத்தி எங்களுடைய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் சமூக ஊடகங்களில் எங்களோடு இணைந்திருங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்