Babasaheb Ambedkar - அன்றைய காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை வஞ்சித்தது எப்படி?

    • எழுதியவர், மிர்ஸா அஸ்மெர் பேக்
    • பதவி, பேராசிரியர்

(இக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல.)

அம்பேத்கரை காங்கிரஸ் வஞ்சித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

(கடந்த ஆண்டு பிபிசி தமிழில் வெளியான இந்தக் கட்டுரை பீம்ராவ் அம்பேத்கரின் 128வது பிறந்தநாளை முன்னிட்டு மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.)

இந்திய அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கரை சேரவிடாமல் தடுக்க காங்கிரஸ் கட்சி அனைத்து வழிகளையும் கையாண்டது.

தன் கொள்கையில் வேட்கை கொண்ட மனிதரான அவரது சமூக கருத்துகள் காங்கிரசின் பெரும் கவலையாக இருந்தது. எனவே, அவரை எப்படியாவது அரசியல் நிர்ணய சபையில் சேரவிடாமல் தவிர்க்க சதி செய்தது. தனக்கு இணக்கமான தலித் தலைவர்கள் சிலரைக் கொண்டு இதனை செய்ய முயன்றது.

அரசியல் நிர்ணய சபைக்கு தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட 296 உறுப்பினர்களில் அறிஞரான அம்பேத்கரின் பெயர் இல்லை என்பது வேதனைக்குரியது. மாகாண சட்டமன்றங்கள் வாயிலாக அரசியல் நிர்ணய சபைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பம்பாய் மாகாணத்தில் இருந்து பட்டியல் சமுதாயக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த காரணத்தால் அவர்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இல்லாத நிலையில் அம்பேத்கர் இருந்தார்.

சர்தார் படேல் பிறப்பித்த உத்தரவு காரணமாக அம்பேத்கர் பம்பாயில் இருந்து 296 உறுப்பினர் கொண்ட அவைக்குத் தேர்வு செய்ய விடாமல் பம்பாய் மாகாண முதல்வர் பி.ஜி.கெர் பார்த்துக் கொண்டார். அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட விடாமல் காங்கிரசும் காந்தியும் ஒரு இடத்தைக் கூட விட்டு வைக்காத நிலையில், ஒன்று பட்ட வங்காளத்தில் தலித்- இஸ்லாமியர் இடையேயான ஒற்றுமைக்கான சிற்பி, ஜோகேந்திர நாத் மண்டல் முஸ்லிம் லீக் உதவியுடன் அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கு வங்காளத்தில் இருந்து தேர்ந்தெடுக்க உதவினார்.

அம்பேத்கரை காங்கிரஸ் வஞ்சித்தது எப்படி?

இன்றைக்கு நாம் அறிந்த அம்பேத்கர் முஸ்லிம் லீக்கினால் உருவாக்கப்பட்டவர் என்பது வியக்கத்தக்க ஒன்று அல்லவா?. காங்கிரசால் வரலாற்றின் குப்பைக் கூடையில் போடப்பட்ட அம்பேத்கரை அந்த குப்பைக் கூடையில் இருந்து தோண்டி எடுத்தது முஸ்லிம் லீக். முஸ்லிம் லீக்கிற்கு மண்டல் ஆதரவு அளித்ததற்கு காரணம், தலித்துகளுக்கு எதிரான மற்றும் வகுப்புவாத காங்கிரஸ் ஆளும் இந்தியாவை விட, மதச்சார்பற்ற ஜின்னாவின் பாகிஸ்தானில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நன்றாக இருப்பார்கள் என்று அவர் எண்ணினார். ஜின்னாவின் மதச்சார்பற்ற கொள்கைகளின் அபிமானியாக அவர் திகழ்ந்தார்.

சிறுபான்மையினத்தவர்களின் பாதுகாவலராக காந்தியை விடவும் நேருவைவிடவும் ஜின்னாவை அவர் உயரத்தில் வைத்திருந்தார். எனவே மண்டல் இந்தியாவில் இருந்து வெளியேறி பாகிஸ்தானின் முதலாவது சட்ட அமைச்சரானதுடன் மட்டுமின்றி, பாகிஸ்தானை தோற்றுவித்த தந்தையர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். பாகிஸ்தான் அரசில் உயர் பதவி வகித்த இந்து, மண்டல் ஆவார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த பாகிஸ்தானில் மதச்சார்பின்மையை உறுதியாக ஊக்குவித்தவர் இவர். இருப்பினும் ஜின்னாவின் மறைவிற்குப்பின் அவர் கனவுகள் நசுக்கப்பட்டன.

அம்பேத்கரை காங்கிரஸ் வஞ்சித்தது எப்படி?

அரசியல் நிர்ணய சபையில் நுழைவதற்கு முன் அம்பேத்கர் மேலும் சில தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது. பிரிவினை திட்டத்தின் கீழ், இந்துக்கள் 51%க்கு மேல் உள்ள பகுதிகள் இந்தியாவில் இருக்கும். 51%க்கு மேல் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

காந்தியின் விருப்பத்திற்கு எதிராக அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்க காரணமாக இருந்த 4 மாவட்டங்கள், ஜஸ்ஸோர், குல்னா, போரிஷால் மற்றும் பரீத்பூர் ஆகியவற்றில் 71 % க்கு மேற்பட்ட இந்துக்கள் இருந்தனர். எனவே, அந்தக் கோட்பாடுகளின்படி பார்த்தால், இந்த நான்கு மாவட்டங்களும் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அம்பேத்கரை தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து அனுப்பிய அந்த மக்களுக்கு தண்டனை என்று கூறத்தக்க வகையில், இந்த நான்கு மாவட்டங்களையும் பாகிஸ்தானுக்கு ஜவஹர்லால் நேரு வழங்கினார். இதன் காரணமாக அம்பேத்கர் பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபை உறுப்பினரானார். அவரது இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் பதவி ரத்தானது.

அம்பேத்கரை காங்கிரஸ் வஞ்சித்தது எப்படி?

இப்போது வங்காளம் பிரிக்கப்பட்டுவிட்டது. அரசியல் நிர்ணய சபைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க புதிதாக மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற வேண்டியதாயிற்று. அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் இனியும் நீடிக்க முடியாது என்ற நிலை வந்த காரணத்தால், அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தார். இதை அரசியல் பிரச்சனையாக்கவும் முடிவு செய்தார்.

இதன் காரணமாக காங்கிரஸ் தலைமை, அவரை அவையில் சேர்க்க முடிவு செய்தது. பம்பாயில் இருந்து அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த எம்.ஆர். ஜெயகர் என்ற சட்ட வல்லுநர் பதவி விலகினார். அந்த இடத்தை ஜி.வி. மவலங்கரை வைத்து நிரப்ப முடிவு செய்யப்பட்டிருந்தது. 1947 ஆகஸ்ட் 15 முதல் மத்திய நாடாளுமன்றமாக செயல்பட இருந்த அரசியல் நிர்ணய சபையின் தலைவராக மவலங்கரை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஜெயகரின் இடத்தை அம்பேத்கரை வைத்து நிரப்ப காங்கிரஸ் முடிவு செய்தது.

அம்பேத்கரை காங்கிரஸ் வஞ்சித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

பின்னர் அம்பேத்கர் 1951 செப்டம்பரில் அமைச்சரவையில் இருந்து விலகியதும் அவரை அறிக்கை தாக்கல் செய்ய மக்களவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. அவை நடைமுறைச் சட்ட விதிகளின்படி, ஒரு அமைச்சர் பதவி விலகினால் அவர் பதவி விலகலுக்கான காரணத்தை அவையில் விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கிறது. அம்பேத்கர் தன் பதவி விலகலுக்கான காரணத்தை அடிக்கோடிட்டு இருந்தார்.

நேருவுக்கு அவர் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தாலும், அரசாங்கத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டதாலும் எரிச்சலடைந்திருந்தார். இறுதியாக இந்து சட்ட மசோதா கையாளப்பட்ட விதம் அவரை பதவி விலக வைத்தது. இந்த மசோதா 1947 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மசோதா நான்கு வருடங்களுக்குப்பின் " புலம்புவாரற்றும் பாராட்டப்படாமலும்" மரணித்தது.

"இந்த சட்ட மசோதா இந்த நாட்டில் சட்ட மன்றம் மூலம் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சமூக சீர்திருத்த நடவடிக்கை" என்று அம்பேத்கர் எண்ணினார். இந்த மசோதாவை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் அவையில் தொடர்ந்து உறுதியளித்தும் இந்த மசோதா கைவிடப்பட்டது என்றும் அவர் விளக்கினார்.

நேரு

பட மூலாதாரம், Getty Images

"பிரதமரின் வாக்குறுதிகளுக்கும் செயல்களுக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை என்றால், அத்தவறு கண்டிப்பாக என்னுடையதல்ல" என்றும் அவர் இறுதியாக குறிப்பிட்டார்.

காங்கிரஸ் அதன் பின்னரும் அம்பேத்கரை நிம்மதியாக இருக்கவிடவில்லை. 1952ல் , அம்பேத்கர் வடக்கு மும்பை மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்ட தன் முன்னாள் உதவியாளர் என்.எஸ். கஜ்ரோல்கரிடம் தோல்வியடைந்தார். அதற்கு காங்கிரஸ், அம்பேத்கர் சமூக கட்சியில் இருந்து போட்டியிட்டார் ஆகவே அவரை எதிர்ப்பதைத்தவிர வேறு வழியில்லை என்று காரணம் சொன்னது. ஆனால் உண்மையில் அம்பேத்கர் சிறிது காலம் முன்புதான் பதவி விலகியிருந்தார். இந்து சட்ட மசோதாவில் அவரது நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் விலகியிருந்தார். காங்கிரஸ் உட்-சாதி அரசியல் செய்தது. அவரது முன்னாள் உதவியாளர் என்.எஸ். கஜ்ரோல்கரை வேட்பாளராக நியமித்து அவரை நாடாளுமன்றத்திற்கு வரவிடாமல் தடுத்தது. நேருவும் இந்த தேர்தலில் இரண்டு முறை இந்த தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்தார். அம்பேத்கரின் தோல்வியை உறுதி செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவையும் நேரு கோரிப் பெற்றார். நேருவின் தீவிர முயற்சி காரணமாக அம்பேத்கர் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டார். ஆனால் அத்துடன் நிற்கவில்லை. 1954ல் பாந்ரா மக்களவைக்கான இடைத் தேர்தலில் அம்பேத்கர் காங்கிரசால் வீழ்த்தப்பட்டார்.

நிகழ்ந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்கள், குறிப்பாக நேரு, அம்பேத்கர் மீது ஒருபோதும் நம்பிக்கை வைத்ததில்லை. அவரை பிடிக்கவில்லை என்பதை மறைக்கவும் முயற்சிக்கவில்லை. இந்து சமூகத்திலும், செயலிலும் சமத்துவத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற அம்பேத்கரின் புரட்சிகர எண்ணங்கள் காங்கிரசாலும் அதன் சகிப்புத்தன்மை மிக்க, ஜனநாயக மற்றும் தாராளவாதத் தலைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

(கட்டுரையாளர், அலிகர் முஸ்லிம் பல்கல்கலைக்கழக ஆட்சி இயல் துறை பேராசிரியர்)

''இந்தியாவில் ஜனநாயகம் செயல்படுமா? - அம்பேத்கர் பதில்

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: