You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காவிரி: வார்த்தை ஜாலங்களில் விளையாடுகிறதா மத்திய அரசு?
`ஸ்கீம்` என்பது காவிரி மேலாண்மை வாரியம் மட்டும் அடங்கியது அல்ல; தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் கிடைப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.
'உச்சநீதிமன்றத்தின் இந்த கூற்று காவிரி மேலாண்மை அமைக்கப்படும் என்ற நம்பிக்கையை தருகிறதா? இந்த விவகாரம் தொடர்ந்து அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறதா?' என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
"தீர்ப்பில் காவேரி மேலாண்மை வாரியம் என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தால் இந்த போராட்டமே வந்திருக்காது, உச்ச நீதிமன்றம் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்," என்கிறார் மௌளிதரன் செல்வம் எனும் நேயர்.
"நிச்சயமாக ஒரு நம்பிக்கையை அளிக்கும் இந்த கருத்து வரவேற்கதக்கது. ’ஸ்கீம்’ என்பது காவேரி மேலாண்மை வாரியம் மட்டுமல்ல காவேரி மேலாண்மை வாரியத்தையும் உள்ளடக்கியது என இன்று விளக்கியிருப்பதை பார்க்கும்போது தமிழகத்திற்கு சாதகமான அம்சங்கள் இந்த தீர்ப்பில் மறைந்துள்ளதை அறியலாம்," என்கிறார் துரை முத்துச்செல்வம்.
"அப்படி பொருள் கொள்ளவும் இடமிருக்கிறது. "விநாச கால விபரீத புத்தி". இந்தியர்கள் அனைவரும் பதற்றத்துடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்," என்கிறார் ரெங்கசாமி குமரன்.
"காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதை விட்டுவிட்டு, மத்திய அரசு வார்த்தை ஜாலங்களில் விளையாடிக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்வாதார அடிப்படை உரிமையில் பங்கம் ஏற்படுத்தி ஒரு முழு வடிவ அரசியல் முன்னெடுப்பை செய்வதற்கு அடித்தளம் இட்டுவருகிறது, கலகம் என்ற கொள்கையோடு வலம் வருது மத்திய அரசு," என்கிறார் அப்துல் சமது எனும் நேயர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்