You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வெற்றிக்கும், தோல்விக்கும் காரணம் என்ன?
'சும்மா உட்கார்ந்து இருக்கும்போது எத்தனை ஐடியாக்கள் நமக்கு தோன்றுகின்றன.இவைதான் ஸ்டார்ட் அப் (Start Up) உருவாக காரணமாக இருக்கின்றன.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஒவ்வொரு விநாடியும் உலகத்தில 1 முதல் 3 ஸ்டார்ட் அப் தொடங்கப்படுகின்றன.
ஆனால் ஒரு ஆராய்ச்சியின்படி, தொடங்கப்படும் பத்து நிறுவனங்களில் ஒன்று அல்லது இரண்டுதான் வெற்றியடைகிறது.
ஸ்டார்ட்-அப்களின் வெற்றிக்கும், தோல்விக்கும் காரணம் என்ன? இந்த வார வரவு எப்படி பகுதியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றி ஆராய்வோம்.
ஸ்டார்ட்-அப்களை வெற்றியடைச் செய்யும் அம்சங்கள் என்ன?
ஒரு நல்ல ஸ்டார்ட்-அப்புக்கு ஒரு நல்ல ஐடியா தேவை. அந்த ஐடியா சரியானதாக இருக்க வேண்டும்.
ஐடியா என்றால் புதுமையான விசயமாக தான் இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை (existing services and infrastructure) எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்பதும் ஐடியா தான். இப்படி மாற்றி யோசித்தாலே போதும்.
டாக்ஸியை மக்கள் பல காலமாக பயன்படுத்தி வந்தாலும், டாக்ஸி சேவையை நம் மொபைலுக்கே கொண்டு வந்தன சில நிறுவனங்கள். இப்படியாகதான் ஸ்டார்ட் அப்-களுக்கான யோசனை இருக்க வேண்டும்.
பலர் முதல் ஸ்டார்ட் அப்பையே மில்லியன் டாலர் மதிப்புடையதாக மாற்றிவிடுகிறார்கள் . ஆனால் சிலர் இரண்டாவது முயற்சியில் தான் வெற்றியடைகிறார்கள்.
இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இந்தோனேசியா போன்ற சில நாடுகள்களில் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கின்றன.
ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை வெற்றி பெற செய்வது எது?
முதலில் ஐடியா வலுவானதாக இருக்க வேண்டும். அந்த ஐடியா மக்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கும் எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவையாகவும் இருக்கலாம். உங்கள் சேவை அல்லது தயாரிப்பு மற்றவற்றிலிருந்து எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது? அது எவ்வளவு பேரின் பிரச்சனைகளை , எந்தவிதத்தில தீர்க்கும் என்பதை யோசிக்க வேண்டும்.
அந்த சேவை மற்றும் பொருள் பற்றி ஆய்வு செய்வதோடு அதற்கு எந்த அளவு தேவை இருக்கு என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
ஐடியா சரியாக இருந்தால், பணம் எப்படியும் கிடைத்துவிடும்.
அடுத்ததுமுதலீடு:
முதல் வழி: சுயமுதலீடு.
அடுத்து:கூட்டு முதலீடு.
அடுத்தது அதிக நிதியும், முதலீட்டில் ஆர்வமும் இருக்கும் நபர் ஒருவர்தானாக முன்வந்து முதலீடுசெய்றது.
நான்காவது தொழில் தொடங்குவதற்காக வங்கிகள் அல்லாத கடன்தரும் நிறுவனங்களிடம் இருந்து பணம் வாங்கி முதலீடு செய்வது.
நீண்ட காலவளர்ச்சிக்காக துணிகர மூலதன அமைப்புகளின் உதவியுடன் தொழில் தொடங்குவது. தொழிலில் உள்ள ரிஸ்க்கை சமாளிக்க இந்த அமைப்புகள் உதவியாக இருக்கும்.
இறுதியாக ஸ்டார்ட்-அப்புக்கு முதலீடு தரும் அரசு திட்டங்கள்.
ஒரு ஸ்டார்ட்-அப்பை தொடங்குவது பெரிய விஷயம் இல்லை. அதனை எத்தனை நாள் சரியாக நடத்த முடியும் என்பது தான் உங்கள் ஐடியா எவ்வளவு சிறப்பானது என்பதை காட்டும். உங்கள் குழு எவ்வாறு செயல்படுகிறது, பணியில் அவர்களின் அர்பணிப்பு எந்த அளவிறகு உள்ளது? இப்படி பல கேள்விகளுக்கு மத்தியில் உங்கள் வணிக மாதிரி எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பதும் முக்கியம்.
ஏறக்குறைய எழுபது சதவீதம் தொழில் முனைவோர் பாரம்பரிய தொழிலில் வேலை செய்யும்போதே, தோன்றிய ஐடியாக்களை வைத்து, ஸ்டார்ட்-அப்பை தொடங்குவதாக ஹார்வார்ட் பிசினஸ் ரிவியூ என்றபொது மேலாண்மை பத்திரிகை கூறுகிறது.
எனவே, ஒரு ஐடியா எங்கிருந்தும் எப்படி வேண்டுமானாலும் கிடைக்கலாம்.
அவை நம் சிந்தையில் தோன்றும்போது, அதை தவறவிட்டுவிட கூடாது. அது ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க உங்களுக்கு அது ஒரு துருப்புச்சீட்டாக கூட இருக்கலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்