You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாதம் விவாதம்: தமிழ்மொழியின் மீது அக்கறை கொண்டுள்ளதா காங்கிரஸ்?
தமிழ் மொழியை அகற்ற முயற்சிக்கிறது பா.ஜ.க என்று ராகுல் காந்தி பேசி இருந்தார்.
இதனை அடிப்படையாக வைத்து பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில், தமிழ்மொழியின் மீது அக்கறை கொண்டுள்ளதா காங்கிரஸ்? மொழியை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய முயல்கிறதா தேசிய கட்சிகள்? என்று கேட்டிருந்தோம்.
இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.
"காங்கிரஸுக்கு தமிழ்பற்று உண்டு. மொழி அரசியலை நடத்த தேசிய கட்சிகளை தமிழர்கள் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டார்கள் . தேசிய கட்சிகள் இன்று வரை தமிழை ஆட்சிமொழியாக்க மறுக்கிறார்கள் . காங்கிரஸின் வளர்ச்சிக்கு தமிழ் மொழி எவ்வளவு தொண்டு ஆற்றியுள்ளது என்பதை அந்த கட்சியில் இருந்த தமிழறிஞர்களே சாட்சி" என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் துரை முத்துச்செல்வம்.
"எதிரிக்கு எதிரி நண்பன். தமிழக கட்சிகள் உட்பட யாருக்கும் தமிழ் மொழி மீது பாசமோ, பற்றோ இல்லை. தமிழை வைத்து எல்லா கட்சிகளும் அரசியல்தான் செய்கிறார்கள். அதை மக்கள் உணர்ந்து கொண்டால் சரி" என்கிறார் சரோஜா பாலசுப்ரமணியன்.
"ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது ராகுலின் பேச்சு. இந்தியை எம்மீது திணித்து போராடிய எம்மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்றொழித்த கட்சியல்லவா காங்கிரஸ். எதை செய்தாவது மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தந்திர உத்தியே ராகுலின் இந்தப் பேச்சு" என ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார் தமிழ்வேல் என்ற நேயர்.
"காங்கிரஸ் இனத்தை அழித்தது; பிஜேபி மொழியை அழிக்கிறது. இரண்டுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை" என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் மதிவாணன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்