உலகப் பார்வை: அமெரிக்க தூதரை ''ஒரு நாயின் மகன்'' என கூறிய பாலத்தீனிய அதிபர்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

''ஓரு நாயின் மகன்''

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் டேவிட் ஃப்ரீட்மேனை ''ஓரு நாயின் மகன்'' என பாலத்தீனிய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறியுள்ளார். மேற்கு கரையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு அமெரிக்க தூதர் டேவிட் ஃப்ரீட்மேன் ஆதரவளித்ததால், மஹ்மூத் அப்பாஸ் இக்கருத்தைக் கூறியுள்ளார்.

பெண்ணைக் கொன்ற உபர் தானியங்கி கார்

அமெரிக்காவில் உபர் நிறுவனத்தின் ஓட்டுநர் அல்லாத கார், முதல் முறையாகப் பாதசாரி ஒருவர் மீது மோதி அவரை கொன்ற நிலையில், உபேர் நிறுவனம் தனது ஓட்டுநர் அல்லாத கார்களின் சோதனையை நிறுத்தியுள்ளது.

ஒரு பெண் சாலையைக் கடக்கும்போது, அவர் மீது மோதிய உபர் காரில், ஓட்டுநர் இருந்தபோதிலும் அது தானியங்கி முறையில் இருந்துள்ளது.

ஆஃபிரின் நகரத்தில் கொள்ளை

சிரியாவில் குர்துக்களின் நகரமான ஆஃபிரின் நகரத்தைக் கைப்பற்றிய துருக்கி ஆதரவு போராளிகள், அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

விவாகரத்தை அனுமதிக்குமா பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸில் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்ய அனுமதிக்கும் விவாகரத்து மசோதா, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், இது வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.

இருந்தாலும், பிலிப்பைன்ஸின் செனட் சபையும் இந்த விவாகரத்து மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

உலகம் முழுவதும் பிலிப்பைன்ஸ் மற்றும் வாடிக்கன் சிட்டியில் மட்டுமே விவாகரத்து சட்டவிரோதமானதாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: