You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#வாதம்விவாதம்: ''வரி செலுத்தும் மாநிலம் ஒன்று அதை அனுபவிக்கும் மாநிலம் ஒன்று''
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் தமிழகம் நல்ல பலனடைந்துள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தகவல் வந்துள்ளது. இந்நிலையில்,''தமிழகம் நல்ல பலனை கண்டுள்ளது என்பது சரியான முடிவா?, சாமானிய மக்களைக் கணக்கில் கொள்ளாமல் செய்யப்பட்ட மதிப்பீடா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.
``சாமனியர்க்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. சட்டபூர்வமான வழிப்பறி தான் இந்த GST. எந்த முதலீடும் இல்லாமல் வருகிறது வருவாய் மத்திய அரசுக்கு. வரி செலுத்தும் மாநிலம் ஒன்று அதை அனுபவிக்கும் மாநிலம் ஒன்று`` என்கிறார் துரை எனும் நேயர்.
``தமிழக நிதிநிலை அறிக்கையில் GST ஆல் நல்ல பலனடைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கும் மாநில அரசு, இவ்வரி கொள்கையால் இழந்திருக்கும் மாநில வருவாய் எவ்வளவு என்ற பட்டியலை வெளியிட இயலுமா?. இவ்வரி கொள்கையால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய நடுவணரசு வழங்கிய இழப்புத் தொகையைத்தான் திருப்பித் தர முனையுமா? இல்லை பெட்ரோலிய பொருட்களுக்காக மாநில வருவாயை இவ்வரி கொள்கைக்கு விட்டுக் கொடுக்கத்தான் முயலுமா?`` என கேட்டுள்ளார் சக்தி சரவணன்.
``ஜிஎஸ்டி வரி விதிப்பு தற்போது வேண்டுமானால் பலன் தராதது போல் தோன்றினாலும், தொலைநோக்கு பார்வையில் அரசுக்கும், சாமானிய மக்களுக்கும் நல்ல பலனை கொடுக்கும். ஆனால் மத்திய அரசு, வரி விதிப்பை கண்காணிக்க வேண்டும்.`` என கூறுகிறார் சரோஜா.
``ஜிஎஸ்டி தமிழகத்தை காவு வாங்கும் அரக்கன். அதை உருவாக்கிய பெருமை காங்கிரஸ் கும் அதை அமல்படுத்திய பெருமை பி ஜே பி-யை சேரும்.``என்கிறார் விமல் பாண்டியன்.
``பலன் இருந்தால் நிதி பற்றாக்குறை எதற்காக வருது?`` என கேட்கிறார் ராஜவேலு.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்