மத்திய அரசிலிருந்து வெளியேறியது தெலுங்கு தேசம்

பட மூலாதாரம், Getty Images
மத்திய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசிலிருந்து வெளியேறுவதாக தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
புதன்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராத மத்திய அரசிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனது கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்களான அசோக் கஜபதி ராஜூ மற்றும் சுஜானா செளத்ரியை நாளை பதவி விலக சொல்லிவிட்டதாக கூறி உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதியிடம் பேசுவதற்கு தான் முயற்சி செய்ததாகவும். ஆனால், தனது அழைப்பை அவர் எடுக்கவில்லை என்று கூறிய சந்திரபாபு நாயுடு, எங்களை தவிர்க்கிறார் என்று நான் நினைக்கவில்லை என்று கூறி உள்ளார்.
"ஆந்திர பிரதேசத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும், வருவாய் இழப்பு குறித்தும் பேசினேன். ஆனால், நாங்கள் அதிக நிதி கேட்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகிறார்." என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
மேலும் , மாநில பிரிவினை போது கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.
பிற செய்திகள்:
- இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்
- 'லெனின், ஸ்டாலின், மார்க்ஸ் என அனைவரும் அகற்றப்பட வேண்டும்'
- சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை என பிரதமர் மோதி எச்சரிக்கை
- 'வணக்கம் தலைவரே`: ஹாஜி மஸ்தான் - வரதராஜ முதலியார் நட்பு எப்படி தொடங்கியது?
- புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி - உலகின் முன்னணி மாநிலமாகும் தமிழகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












