நாளிதழ்களில் இன்று: விரைவில் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப் போகிறார் கமல்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா: "விரைவில் கட்சியை பதிவு செய்ய போகிறார் கமல்"

நடிகர் கமலஹாசன் விரைவில் தனது கட்சியை பதிவு செய்ய இருப்பதாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா` நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தயாராக உள்ளது என்று கமலஹாசன் நற்பணி இயக்க தலைவர் ஒருவர் கூறியதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது. ஒரு கட்சியை பதிவு செய்வதற்கு ஒருவார காலம் தேவைப்படும் என்று தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி கூறியதாகவும் அந்த நாளிதழ் கூறுகிறது.

தி இந்து (தமிழ்)

தினத்தந்தி: "காஷ்மீர் ராணுவ முகாமுக்குள் தாக்குதல்"

காஷ்மீர் ராணுவ முகாமுக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 அதிகாரிகள் மரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெண்கள் குழந்தைகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர் என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் என கருதப்படும் அவர்கள் ராணுவ வீரர்களின் உடை அணிந்து ஏ.கே ரக துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான ஆயுதங்களுடன் வந்ததாக கூறுகிறது அந்த நாளிதழ் செய்தி.

தினமணி: ஜெ.தீபா வீட்டுக்கு வந்த போலி வருமான வரி அதிகாரி

சென்னையில் உள்ள, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை நடத்தி வரும் ஜெ.தீபாவின் வீட்டுக்கு, வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறி சனிக்கிழமை வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது."சென்னை தியாகராயநகர் சிவஞானம் சாலையில் வசித்துவரும் ஜெ.தீபாவின் வீட்டுக்கு சனிக்கிழமை காலை 6 மணியளவில் ஒரு மர்ம நபர் வந்தார். அவர் தனது பெயர் மித்தேஷ்குமார் என்றும், தன் வருமான வரித் துறை உதவி ஆணையர் என்றும் அறிமுகம் செய்து கொண்டு, வீட்டில் சோதனையிடப்போவதாக கூறி உள்ளார். அதற்கான ஆவணங்களையும் அவர் காட்டி உள்ளார். இதை அடுத்து வீட்டில் தனியாக இருந்த தீபாவின் கணவர் மாதவன் சோதனைக்கு அனுமதித்துள்ளார். பின், மாதவனுக்கும் மித்தேஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த மாம்பலம் உதவி ஆணையர் செல்வம் தீபா வீட்டுக்கு விரைந்து, அந்த நபரின் அடையாள அட்டையை வாங்கி பார்வையிட்டார். அப்போது அந்த நபர் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து அப்பகுதியில் தயாராக இருந்த ஆட்டோவில் தப்பிச் சென்றார்." என்று விவரிக்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

தி இந்து (ஆங்கிலம்)

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வர்தா புயலில் ஏறத்தாழ ஒரு லட்சம் மரங்கள் வீழ்ந்தன. அந்த சமயத்தில் புதிய மரச்செடிகள் நடப்படும் என்று மாநகராட்சி உறுதி அளித்து இருந்தது. ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை என்று தி இந்தி ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :