You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரு மாணவிக்காக புதிய ரயில் நிறுத்தத்தை அறிமுகப்படுத்திய ரஷ்யா
ஒரு 14 வயது பள்ளி மாணவி மற்றும் அவரது பாட்டிக்காக, வடமேற்கு ரஷ்யாவில் ஒரு புதிய ரயில் நிறுத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கரினா கோஸ்லோவா என்ற சிறுமி பள்ளிக்குச் சென்றுவர உதவுவதற்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-முர்மான்ஸ்க் ரயில் பாதை, தொலைதூர போயாகோண்டா கிராமத்திற்குச் சேவையை தொடங்கியுள்ளதாக குடோக் செய்தித்தாள் கூறியுள்ளது.
சிறுமி கரினா கோஸ்லோவாவின் பாட்டி நடாலியா கோஸ்லோவா ஒரு முன்னாள் நர்சரி பள்ளி ஆசிரியர்.
போயாகோண்டா பகுதியில் வசிக்கும் தனது பேத்தி கரினா உட்பட, மற்ற குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காகக் கடந்த பத்தாண்டுகளாக நடாலியா நீண்ட பயணத்தை மேற்கொண்டுவந்தார்.
ரயில்வே ஊழியர்களை ஏற்றிக்கொள்ளவும், அவர்களை இறங்கிட மட்டுமே முன்பு இங்கு ரயில்கள் நின்றன. இதற்காக நிற்கும் ரயில்களை விட்டால், நடாலியாவுக்கு வேறு வழியில்லை. இதனைத் தவறவிட்டால், சிறுமி கரினாவால் பள்ளிக்குச் செல்ல முடியாது.
நடாலியா தினமும் 3 மணிநேரம் பயணம் செய்வார். காலை 7.30 மணிக்கு வரும் ரயிலில் பள்ளிக்கு செல்லும் இவர்கள், இரவு 7.10 மணிக்கு வரும் ரயிலில் ஊர் திரும்புவார்கள். கிட்டதட்ட 9 மணிக்கு வீட்டுக்கு திரும்புவார்கள் என குடோக் செய்தித்தாள் கூறுகிறது.
''முன்பு, தினமும் காலை கியோஸ்க் கிராமத்தில் குழந்தைகளுக்காக காத்திருப்பேன். பிறகு ஒரு கிலோ மீட்டர் நடந்துசென்று போயாகோண்டா ரயில் நிலையத்திற்குச் செல்வோம்.'' என கூறுகிறார் நடாலியா.
''கியாசியா ரயில் நிலையத்திற்குச் செல்லும் ரயிலைப் பிடிப்போம். வழியில் வரும் குழந்தைகளையும் உடன் அழைத்துக்கொள்வோம். பிறகு பள்ளி பேருந்தில் மாறி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வார்கள்.'' எனவும் கூறுகிறார் நடாலியா.
புதிய ரயில் நிறுத்தத்தினால், இனி கரினா விடு திரும்புவதற்காக நெடு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமிருக்காது.
சிறிய போயாகோண்டா கிராமத்தில், 50க்கும் குறைவான குடும்பத்தினரே வசிக்கின்றனர். நடாலியாவால் இந்த கிராமத்தில் இருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரே மாணவி கரினா மட்டுமே.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :