பட்ஜெட் 2018: மீம்களால் ஆதங்கத்தை போக்கிக் கொள்ளும் இணையவாசிகள்

மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், வரிவிலக்கு வரம்பு உயர்வு உள்ளிட்ட நடுத்தர வர்க்க எதிர்பார்ப்புகள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத் தளத்தில் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பட்ஜெட்டை கிண்டலடிக்கும் மீம்கள் சமூக ஊடகங்கள் முழுவதிலும் குவிகின்றன.

அதில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

காலையில் முழு நிலவாக இருந்த நடுத்தர வர்க்க நம்பிக்கை பட்ஜெட் வாசிக்கத் தொடங்கிய பிறகு படிப்படியாகத் தேய்ந்து கிரகணமாக மாறிவிட்டதாக சித்திதரிக்கும் சமயோசிதப் பதிவு.

கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்த அரசியல் நன்கொடைகளில் 89 சதவீதத்தை பெற்ற கட்சி பாஜகதான் என்னும் போது இது மக்களுக்கான பட்ஜெட் என்று எப்படி நம்புவது என்று கேள்வி கேட்கும் பதிவு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: