நாளிதழ்களில் இன்று: பாகிஸ்தானைவிட பின் தங்கிய இந்தியா

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (செவ்வாய்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி:

உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் இந்தியாவுக்கு 62-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 22-வது இடத்திலும், சீனா 26-வது இடத்திலும், வங்காள தேசம் 34-வது இடத்திலும், இலங்கை 40-வது இடத்திலும், பாகிஸ்தான் 47-வது இடத்தில் உள்ளன என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர்:

அரசு பேருந்து கட்டண உயர்வால் மக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்ப்பைச் சமாளிக்க, பழைய பேருந்துகளுக்கு பதில் புதிதாக 2000 பேருந்துகளை வாங்க அரசு போக்குவரத்து கழகங்கள் மும்முரமாக உள்ளன என தினமலர் செய்தி கூறுகிறது.

தினமணி:

அரசியல் சுற்றுப்பயணம் குறித்தும், அரசியல் களத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், ரசிகர்களுடன் ஆலோசனை நடத்திய நடிகர் கமல், '' நற்பணி இயக்கத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த வேண்டிய நேரம், கடமை வந்துள்ளது'' என கூறியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

15 முதல் 49 வயதுடைய 79% பெண்களும், 15 முதல் 54 வயதுடைய 78% ஆண்களும் குறைந்தது ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர் என குடும்ப சுகாதார ஆய்வு கூறுகிறது என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :