"மாத வருமானத்தில் மாற்றமில்லை, பேருந்துக் கட்டணத்தில் மட்டும் மாற்றமா?"

தமிழக அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் சமீபத்தில்தான் முடிந்தது. அப்போது அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்கப்படாததன் காரணம் நிதி நெருக்கடி என்று கூறப்பட்டது.

தற்போது பேருந்துகளின் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன் காரணம் 'செலவினங்கள் அதிகரித்ததால் ஏற்பட்ட நியாயமான தேவையா? நிர்வாகச் சீர்கேட்டால் ஏற்பட்ட நிதி நெருக்கடியா?' என்று பிபிசி தமிழ் நேயர்களிடம் #வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"ஊழல். அதனால் நஷ்டம். அதனால் கட்டண கொள்ளை," என்கிறார் ஆண்டனி ஜான்பால்.

"தமிழக அரசுக்கு நிதி நெருக்கடியெல்லாம் இல்லை! தங்களுடைய சன்மானத்தை உயர்த்த கோரி ஓட்டுனர்கள் போராட்டத்துக்கு அவர்கள் வழியிலே அவர்களுக்கு பதில் கொடுப்பது!. அதாவது தமிழக அரசுக்கு சுரண்டுவதற்கே நிதி குறைவாக இருக்கிறது. இதில் அனைத்து ஓட்டுனர்களுக்கும் ஊதிய உயர்வுக்கு எங்கே செல்வது என்ற ஒரு என்னம்தான்!. ஆதலால் பயணியரின் கட்டணத்தை கணிசமாக உயர்த்தி அதன் மூலம் வரும் கூடுதல் லாபத்தை ஓட்டுனரின் கோரிக்கையை நிறைவேற்றி விடலாம் என்ற கணக்குதான்!," என்கிறார் ஸ்மார்ட் சாகுல் எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர்.

சத்யா நாகராஜ் எனும் நேயர் இவ்வாறு கூறுகிறார்," கிட்ட தட்ட இருமடங்கு கட்டண உயர்வு அதிகம் தான்....செலவுகளை விட நிர்வாக சீர்கேடு தான் உண்மை என்றே தோன்றுகிறது...அதை சமாளிக்க பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளார்களோ."

"நிர்வாக சீர்கேட்டால் மட்டுமே.... அதே பணத்தில் தனியார் பேருந்துகள் இலாபத்தில் இயக்குகின்றன." என்கிறார் நடராஜன் தர்மராஜ்.

"நிர்வாகம் செய்ய தெரியாதவர்களின் கையில் அதிகாரத்தை தந்தால் இப்படி தான் நடக்கும். இந்த ஆட்சி மக்களுக்கு தேவையில்லை. நிதிச்சுமையை குறைக்க மாற்று ஏற்பாடுகளை பற்றி ஆராயமல் நடுத்தர மக்களின் மீது பாரத்தை இறக்கி இருப்பது அரசின் தோல்வியை காட்டுகிறது," என்கிறார் அனந்த நாராயணன்.

"மாத வருமானத்தில் மாற்றமில்லை, மாநகர பேருந்தில் விலை மாற்றம் கொண்டுவந்தால் சமாளிப்பது எப்படி," என்று கேள்வி எழுப்புகிறார் பரூக் பாஷா.

இழந்ததை மீட்க மக்களிடம் வசூல் செய்கிறது இந்த அரசு, என்று கூறுகிறார் காபித்தூள் கலாம் ஆசாத்.

சாதாரண பேருந்துகளாய் இயங்கிக் கொண்டிருந்த பல கிராமப்புற பேருந்துகளும் துரிதப் பேருந்துகளாய் எவ்வித அறிவிப்பமின்றி கட்டணக் கொள்ளை அடித்தார்கள்.தற்போது சாதாரணக் கட்டணத்தில் பேருந்துகளே இல்லை என்றாகி விட்டது.பழைய மாதிரிகிராமப்புற பேருந்துகளை சாதாரணக் கட்டணத்தில் இயக்குவார்களா? என்று கேட்கிறார் தருமன் சுந்தரம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :