ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

முதலாம் ஆண்டு நிறைவு நாளன்று போராட்டம்

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதின் முதலாம் ஆண்டு நிறைவு நாளன்று, அவரைக் கண்டித்து பெண்கள் நடத்திய அணிவகுப்பில் கலந்துகொள்ள அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர்.

சிரியாவில் துருக்கி தாக்குதல்

வடமேற்கு சிரியாவில் குர்திஷ் தீவிரவாதிகளைக் குறிவைத்து, தங்களில் வான்படை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியதாகத் துருக்கி கூறியுள்ளது. இத்தாக்குதலில் ஆறு பொதுமக்கள் உட்பட, 9 பேர் கொல்லப்பட்டதாக குர்திஷ் அமைப்பு கூறியுள்ளது.

22 வீரர்களை அனுப்பும் வட கொரியா

பிப்ரவரி மாதம் தென் கொரியாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸில் மூன்று விளையாட்டுகளில் கலந்துகொள்ள, 22 தடகள வீரர்களை வட கொரியா அனுப்ப உள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி பேசிய போப்

பெரு நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், லத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து பேசினார். பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இதற்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக உள்ளனர் எனவும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :