You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்களின் மரணங்கள் ஏன் நின்றபாடில்லை?
டெல்லியில் மர்மமான முறையில் தமிழக மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம் அடைந்தார். சமீப காலத்தில், மர்மமான முறையில் இறந்த 3-ஆவது தமிழக மாணவர் இவர்.
"சில மாநிலங்களில் தமிழக மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகக் கூறப்படுவதை இது உறுதிப்படுத்துகிறதா? புதிய சூழ்நிலைகள், அழுத்தங்களை எதிர்கொள்ளும் மன உறுதி தமிழக மாணவர்களுக்கு இல்லையா?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் சமூக வலைத்தள நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
"கொலையோ தற்கொலையோ உயர் கல்வி கற்கும் மாணவர்களின் (குறிப்பாக தமிழ்) எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அரசு உரிய நடவடிக்கை வேண்டும், தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழ் மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப் படுகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகத் தெரிகிறது. இது வரை நடந்த மரணங்களே இதற்கு சாட்சி. தொடரும் மரணங்கள் மரணிக்கவில்லை," என்கிறார் சரோஜா பாலசுப்பிரமணியன்.
"சமீபகாலங்களிலா அல்லது இந்த ஆட்சியிலா? என்ற கேள்வியேழுகிறது. மேலும் சில மாநிலங்களில் அல்ல எங்கள் தமிழகத்திலே பாரபட்சமாக நடந்த நீட் தேர்வே போதும் மத்திய அரசு தமிழர்களை எப்படி நடத்தும் என்பதற்கு. பல கஷ்டங்களை கடந்தாலும் படித்து பட்டம் பெறவேணடும் என்ற எண்ணத்தில் செல்லும் மாணவ மாணவர்களின் மனதை மிக மிக நொந்துபொகவைப்பாதாலே இந்நிலை ஏற்படுகிறது," என்கிறார் ரமேஷ் நாராயண்.
சக்தி சரவணன் இவாறு கூறியுள்ளார் ,"யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் தமிழரின் கருத்தியல் சிந்தனை வளர்ச்சியை ஏனைய மொழி மாநிலத்தவரிடம் எதிர்பார்ப்பது மிகவும் அரிதானது."
"சொந்த மாநிலத்திலேயே தமிழர்களுக்கு உயர் கல்வி பயில வாய்ப்பு தர மறுக்கிறது மத்திய அரசு. வேலைவாய்ப்புகளை அண்டை மாநிலத்தவர்க்கே வழங்குகிறது . மெக்கலே கல்வி முறை இந்தியாவை எப்படி சீரழித்து உள்ளது என்பதற்கு இதுவே எடுத்துகாட்டு," என்று கூறியுள்ளார் முத்துச்செல்வம்.
வேலாயுதம் கந்தசாமி எனும் நேயர் மரணமடைந்தவர் தவிர பிறரால் அந்த காரணங்களை எவ்வாறு அறிய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிற செய்திகள்
- `சிறந்த பொய் செய்திகள்`: விருதுகளை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்
- பாகிஸ்தானில் தொடரும் சிறுமிகள் வல்லுறவு: அங்கே இது 'நிர்பயா' தருணமா?
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- வட கொரிய நெருக்கடி: கவனமுடன் பேச்சுவார்த்தையை தொடரும் தென் கொரியா
- ஐசிசி விருது வென்ற விராட் கோலி சினம் அடைந்தது என்?
- ஆரஞ்சு நிறமாக மாறப்போகும் 'பாஸ்போர்ட்': காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்