பட்டம் விடும் திருவிழா: விண்ணில் பறந்த பிரம்மாண்ட பட்டங்கள் (புகைப்படத் தொகுப்பு)

29ஆவது சர்வதேச பட்டம் விடும் திருவிழா அகமதாபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு வடிவங்களிலான பட்டங்களுடன் மக்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்ற கண்கவர் பட்டங்களை தொகுத்தளிக்கிறோம்.

29ஆவது சர்வதேச பட்டத்திருவிழா அகமதாப்பத்தில் நடைபெற்றது.

மாநில முதல்வர் விஜய் ரூபாணி, இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பாகிஸ்தானில் சிறைபட்டுள்ள குல்பூஷன் ஜாதவை விடுவிக்க வேண்டியும் பட்டம் பறக்கவிடப்பட்டது.

அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட 44 நாடுகளை சேர்ந்த 150 பேர் இதில் பங்கேற்றனர்.

இந்தியாவின் 20 மாநிலங்களிலிருந்து வந்த பட்டம் விடுவோரும், இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர்.

பல்வேறு வடிவங்களில் இருந்த, பிரம்மாண்ட பட்டங்கள், மக்களை அதிகம் கவர்ந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :