நாளிதழ்களில் இன்று: மதுரையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமலர்:

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் 1000 முதல் 3000 ரூபாய் வரை பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும், மாடு பிடி வீரர்கள் ஜனவரி 21-ம் தேதி வி.ஏ.ஓவிடம் பெயர்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் தினமலரின் மற்றொரு செய்தி கூறுகிறது.

தினத்தந்தி:

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வருகிற 1-ம் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி:

தமிழகம், கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரிப் பிரச்சனை தொடர்பான வழக்கில், ஒரு மாதத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் சூசகமாகக் கூறியுள்ளது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்போட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை கார்டோசார் 2 வரிசை செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது என தினமணி செய்தி கூறுகிறது. இந்த கார்டோசார் 2 வரிசை செயற்கைக்கோளுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 3 செயற்கைக்கோள்களும், 25 நானோ செயற்கைக்கோள்களும் உடன் செலுத்தப்பட உள்ளது.

தி இந்து (தமிழ்):

தமிழக இன்ஸ்பெக்டர் முனிசேகர் கொலையில் சம்பந்தப்பட்ட கொள்ளையர் நாதுராம் தனது முகநூலில் துப்பாக்கியுடன் இருக்கும் படம் வெளியிட்டது செய்திகளில் வெளியானதை அடுத்து தனது படத்தை முகநூலில் இருந்து நீக்கியுள்ளார் என தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா:

தமிழகத்தின் அரசு பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கியதால் ஏற்பட விபத்துகளில் இதுவரை 5 பேர் இறந்துள்ளனர் என்றும், வேலை நிறுத்தத்தால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :