திருமணம் செய்யகோரி சச்சின் மகளை நச்சரித்த வாலிபர் கைது

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகளுக்கு தொந்தரவு கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள,மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மஹிஷடால் என்ற பகுதியிலிருந்து 32 வயதாகும் தேப்குமார் மெய்ட்டியை காவல்துறை கைது செய்தது.

தேப்குமார் மெய்ட்டி பலமுறை சாராவை தொடர்புகொண்டு தனது காதலை வெளிப்படுத்தியதாகவும், காதலை ஏற்காவிட்டால் சாராவை கடத்தி விடுவேன் என்று அச்சுறுத்தல் விடுத்ததாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

மும்பையில் உள்ள பாந்தரா காவல் நிலையத்தில் மெய்ட்டி மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக தேப்குமார் மெய்ட்டி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் மெய்ட்டியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின்போது, சச்சின் தன்னுடைய மாமனார் என்று கூறி அதிகாரிகளை திகைக்க வைத்துள்ளார் தேப்குமார் மெய்ட்டி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :