You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: பொறியியல் கல்லூரிகளில் குறைந்த மாணவர் சேர்க்கை
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
பெரும்பாலும் அனைத்து நாளிதழ்களிலும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம், ரஜினியின் இணையதளம், டிரம்பின் ட்வீட் குறித்த செய்திகளே பிரதான இடத்தைப் பிடித்துள்ளன.
தினத் தந்தி:
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மசோதாவை எதிர்த்து இந்தியா முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்யும் செய்தி முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது. "தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்தியா மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆணையம் மக்கள் நலனுக்கு எதிரானது என்றும்,மருத்துவ சுகாதார பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் இந்த சங்கம் கூறி வருகிறது. இந்த சங்கத்தில் 2 லட்சத்து 77 ஆயிரம் டாக்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்" என்கிறது அந்த செய்தி.
தினமணி:
பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி கிடையாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்துள்ள ட்வீட் குறித்த செய்தி முதல் பக்கத்தில் பிரசுரமாகி உள்ளது. தலையங்க கட்டுரையாக '2017 - ஒரு மீள் பார்வை` என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், 'முன்னாள் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதவி விலகியது முதல் ரஜினியின் அரசியல் பிரவேசம் வரை` தமிழகம் மற்றும் இந்திய அளவிலான அனைத்து நிகழ்வுகளும் தொகுக்கப்பட்டுள்ளன.
தி இந்து (தமிழ்):
தி இந்து (ஆங்கிலம்):
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகளில் 30 சதவிகிதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பி உள்ளதாக இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தகவல் குறித்த செய்தி பிரதான இடத்தை பிடித்துள்ளது."தமிழகத்தில் உள்ள 526 பொறியியல் கல்லூரிகளில் 177 கல்லூரிகளில் 12,399 மாணவர்களே சேர்ந்துள்ளனர்." என்கிறது அந்த செய்தி.
டைம்ஸ் ஆஃப் இந்தியா:
புத்தாண்டு கொண்டாட்டத்தில் வேகமாக வண்டி ஓட்டியதன் காரணமாக சென்னையில் 5 பேர் மரணித்து இருப்பதாகவும், 300 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் செய்தி வெளியிட்டு இருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ். மேலும் அந்த நாளிதழின் மற்றொரு செய்தி , "தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் குறைந்த அளவு மழையே பெய்துள்ளது" என்று விவரிக்கிறது அந்த செய்தி.
பிற செய்திகள்:
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :