You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திமுக நாளேடான முரசொலி இணையதளத்தை ஊடுருவிய மர்ம நபர்
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழின் இணையதளத்தை கணினிகளை ஊடுருவும் ஹேக்கர் ஒருவர் ஊடுருவி முடக்கினார். ஆனால், தற்போது இணையதளம் மீட்கப்பட்டுவிட்டது.
''கலைஞர் பெற்ற முதற்குழந்தை முரசொலி. அதற்கு அவர் தந்தையும் தாயுமானார். கலைஞரின் அத்தனை போர்க்குணங்களும் முரசொலிக்கு உண்டு. ஏனெனில் கலைஞரின் மற்றொரு வடிவமே முரசொலி. அவரின் எல்லா மெய்ப்பாடுகளையும் முரசொலி காலந்தோறும் எதிரொலித்தே வந்து கொண்டிருக்கிறது.'' என்று திமுக தலைவர் கருணாநிதியின் புகழ்பாடும் நாளேட்டின் இணையதளம் இன்று காலை மர்ம நபரால் ஊடுருவப்பட்டது.
`அட்மின் தயவு செய்து இணையதளத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும். அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகள்' என்றும், `அட்மின் அவர்களே பயப்படவேண்டாம் உங்களை வேலையைவிட்டு அனுப்பமாட்டார்கள்' என்றும் குறிப்பிட்டு ஹேக்டு பை ஃபர்ஹான் என்ற தலைப்பில் மேலே சொல்லப்பட்ட தகவல் அந்த ஊடுருவப்பட்ட பக்கத்தில் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தது.
மேலும், கூகுள் இணையதளத்தில் முரசொலி என்று தேடியபோது கிடைத்த தகவலில், என்மீது அக்கறை கொண்டவர்களுக்கும், என் முதுகுக்கு பின்னால் புறம் பேசியவர்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகள் என்று அந்த ஹேக்கர் குறிப்பிட்டுள்ளார்.
முரசொலி இணையதளத்திற்கு ஊடுருவல் என்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே, கடந்தாண்டு மார்ச் மாதம் ஊடுருவலில் மிகவும் பிரபல குழுவான லீஜியன் முரசொலியை ஹேக் செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, புத்தாண்டு தினத்தன்று இரண்டாவது முறையாக இணையதளம் ஊருடுவப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :