நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி:

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அலுவலகம் மீது நள்ளிரவில் சில மர்ம நபர்கள் சரமாரியாக கல்வீசி தாக்கிய செய்தியும், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ள செய்தியும் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், வேலூர் எம்.பி செங்குட்டுவனைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநில அ.தி.மு.க.வை சேர்ந்த டெல்லி மேல் சபை எம்.பி. கோகுல கிருஷ்ணனும் டி.டிவி தினகரனைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த செய்தியும் வந்துள்ளது.

தினமணி:

இந்திய ரயில்வே பெரிய இழப்புகளை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக, எந்த ஒரு ரயிலின் மொத்தப் பயணிகள் அளவில் பாதிக்கும் கீழாக மட்டுமே பயணிக்கும் ரயில்களை நிறுத்திவிட வேண்டும் போன்ற பரிந்துரைகளை மத்திய ரயில்வே அமைச்சர், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார். இது போன்ற செயல்களைச் செய்வது மக்கள் நல அரசுக்கு அழகல்ல என தினமணி தலையங்கம் எழுதியுள்ளது

தினமலர்:

ஜனவரி இரண்டாம் வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், ஆர்.கே நகரில் வெற்றி பெற்றுள்ள தினகரனாலும், அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் குறைவாக இருப்பதாலும் சட்டசபை கூட்டம் ஆளும் கட்சிக்கும் சவாலாக இருக்கும் என தினமலர் முதல் பக்க செய்தியில் கூறியுள்ளது.

ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை, சுட்டது மற்றொரு இன்ஸ்பெக்டர் முனி சேகர் தான் என்பதைச் சென்னை போலீஸார் உறுதி செய்ததாக நேற்று தகவல் பரவிய நிலையில், பெரியபாண்டியன் இறப்பு தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என சென்னை போலீஸார் கூறியுள்ள செய்தியும் முதல் பக்கத்தில் உள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

இந்திய உளவாளி என்று பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட குல்புஷன் ஜாதவின் குடும்பத்தினர் அவரை இஸ்லாமாபாத்தில் உள்ள சிறையில் சந்தித்தபோது அவர்கள் நடத்தப்பட்ட விதத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லைக் கட்டுபாட்டுக் கோட்டைக்கு கடந்து, இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமத் இயக்கத்தின் தளபதி நூர் முகமத் தந்த்ரேவும் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ்: