You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#வாதம் விவாதம்: ''ஜனநாயகம் கேலிக்கூத்தாகிறது. இதற்கு தேர்தலே நடத்தாமல் இருக்கலாம்''
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிக அளவு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், ''ஓட்டுக்கு பணம் வாங்கும் வாக்காளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது தேர்தல் ஆணையத்தின் இயலாமையா? பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளை, வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதுதான் நிரந்தர தீர்வா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே...
''இது தேர்தல் ஆணையத்தின் இயலாமை எல்லாம் இல்லை. அவர்கள் நினைத்தால் எல்லாம் சாத்தியமே.'' என்கிறார் ஸ்ரீனிவாசன்.
''ஜனநாயகத்திற்கு வேட்டு வைக்கும் அரசியல்வாதிகளை கண்டிப்பாக களையெடுப்பது காலத்தின் கட்டாயமே. பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளை, வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதுதான் நிரந்தர தீர்வாகும்'' என கருத்து தெரிவித்துள்ளார் சிகமணி.
''தமிழகத்தில் பணப்பட்டுவாடா செய்யவில்லை என்றால் வெல்வது கஷ்டம்தான்'' என்பது அப்துலின் கருத்து.
''பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும். நீதிமன்ற வழக்கு முடியும்வரை தொகுதி வாக்குகள் எண்ணப்படமாட்டாது. நீதிமன்றத்தில் பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால், அவரது கட்சியின் வாக்குகள் எண்ணப்படமாட்டாது. இது ஓர் இலகுவான வழி.'' என கூறுகிறார் மகா.
''மக்கள் லஞ்சம் கொடுத்து பழகி விட்டார்கள் இப்போது தேர்தல் நேரத்தில் அதை வாங்கி கொள்கிறார்கள்...இது தொடரும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.'' என்கிறார் ஜான்.
''விலை போகும் மக்களும் அதை கண்டுகொள்ளமல் இருக்கும் தேர்தல் ஆணையத்தின் மெத்தனமும் காரணம்'' என்பது லவ் பீஸ் என்ற பெயரில் இருக்கும் நேயர்.
''ஊழல் அரசு மற்றும் ஊழல் அதிகாரிகளுக்கு தகுந்தவாறு மக்களும் தங்களை மாற்றி அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசை சரிசெய்யாமல் மக்களை சரிசெய்ய முடியாது'' என்பது வெற்றியின் கருத்து.
''ஜனநாயகம் கேலிக்கூத்தாகிறது. இதற்கு தேர்தலே நடத்தாமல் இருக்கலாம்'' என்கிறார் சரோஜா எனும் நேயர்.
''ஒவ்வொரு கடுமையான நடவடிக்கையும் மாற்றுவழிக்கே வழிவகுக்கும். 'எங்கள் வாக்கு விலைக்கு அல்ல' என்று மக்களின் மனமாற்றமே மாற்றத்திற்கான முதல் அடித்தளம் அமைக்கும். மக்களின் மனமாற்றம் நேர்மையற்ற வேட்பாளரைக் காலாவதியாக்கும்'' எனக் கூறுகிறார் சக்தி.
''தகுதி நீக்கம், 10 வருடம் போட்டியிட தடை, இரண்டு வருடம் சிறை'' என தண்டனை பற்றிய தனது கருத்துக்களை அடுக்குகிறார் அன்பு.
''பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்'' என்கிறார் முருகப்பன்.
''பணம் கொடுக்கும் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும்'' என்பது கமலக்கண்ணனின் கருத்து.
''அனைவரும் தண்டனைக்கு உரியவர்கள்'' என்கிறார் சசிகுமார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்