#வாதம்விவாதம்: விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விற்க நினைக்கும் அரசிடம் எப்படி உரிமை கிடைக்கும்?

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட தொடங்கியுள்ளனர்.

பிபிசியில் சமூக வலைத்தளத்தில் நேற்றைய வாதம் விவாதம் பகுதியில், ''விவசாயிகளின் கோரிக்கைகளை செவிமடுக்க அரசு மறுக்கிறதா? விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரையறைக்குள் உள்ளதா?''என கேட்டிருந்தோம். அதற்கு பிபிசியின் நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.

''பசுமைப்புரட்சி திட்டத்தின்கீழ் அந்நிய ரசாயன உரங்களைக் கொண்டு மண்ணை மலடாக்கி, மரபுவழி இயற்கை வேளாண் முறையை ஒழித்த நடுவண், மாநில அரசுகள்தான் இப்பொழுது தனியார் பெருநிறுவனங்களை வேளாண் தொழில் முதலீட்டுக்கு அழைக்கின்றன'' என சக்தி கூறியுள்ளார்.

''அவர்கள் போராடவேண்டிய இடம் டெல்லி இல்லை சென்னை. மாநில அரசுதான் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் மத்தியரசு அல்ல.'' என கோபி என்பவர் தெரிவித்துள்ளார்.

''விவசாயத்தை கார்ப்பரேட் விற்க நினைக்கும் அரசிடம் எப்படி ஒரு விவசாயி் அவன் உரிமையை கேட்க முடியும்? இதை விவசாயத்தின் அழிவாக கருத வேண்டும்.'' என அபுல் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :