You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#வாதம்விவாதம்: “வருமான வரித்துறை மத்திய அரசின் முழுநேர ஏவல்துறையா”
இந்தியாவில் அரசியல் எதிரிகளை குறிவைத்து வருமான வரி சோதனைகள் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில், வருமான வரி சோதனைகள் அரசியலாக்கப்படுகிறதா? அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கும் நடவடிக்கையா? என்று பிபிசி தமிழின் நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவிட்டதை தொகுத்து வழங்குகின்றோம்.
இது அரசியல் பழிவாங்கல்தான் என்பது அன்புடன் எளியவன் அன்பு என்ற பெயரில் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள நேயரின் கருத்தாகும். அதே சமயம் குஜராத்தில் பட்டேல் சமூகத்தில் உள்ள நபர்களிடம் தனது அரசியல் பழிவாங்கல் இல்லாததற்கு தனது ஓட்டு வங்கி பாதிக்கும் என கருதும் மத்திய அரசுக்கு தமிழகத்தில் ஓட்டு வங்கி இல்லாததால் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது என்று அவர் கூறியுள்ளார்.
முகமது ஹாமு நேயர் பழி வாங்கும் நடவடிக்கையே என்று குறிப்பிட்டுள்ள நிலையில், "வெற்றி வெற்றி" என்ற நேயர் இதிலென்ன சந்தேகம் என்கிறார். தாவா முருகனின் பதிவில், மோடியின் முட்டாள்தனத்தில் இதுவும் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், சுப்பிரமணியன் கலைசெல்வன் என்ற நேயர், இவர்களுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று தானே விவாதிக்க வேண்டும். அதனை விடுத்து பழிவாங்கும் நடவடிக்கை என்பது சரியல்ல. சாதாரண மாத ஊதியம் வாங்கும் சராசரி மனிதனுக்கு ஒரு சட்டம். அரசியல்வாதிக்கு ஒரு சட்டமா??? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விக்னேஷ் நேயர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முந்தைய சோதனைகளின் முடிவுகளை பற்றி கேள்வி எழுப்புகிறார்.
சதீஸ் முருகன் நேயர் பாரதிய ஜனதா கட்சியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் மீது ஏன் இத்தகைய சோதனைகள் நடைபெறவில்லை என வினா எழுப்புகிறார்.
சாமானியனுக்கும் தெரியுமே இது அரசியல் பழிவாங்கல் என்பது கொங்கு நாட்டு தங்கம் நேயரின் ட்விட்டர் பதிவு
மேரி மகதலேனா என்பவரின் ட்விட்டர் பதிவில், பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுவதே, செய்த குற்றத்தை ஒப்பு கொண்டதாகவே கருதப்படுவதாக தெரிவிக்கிறார்,
செல்வராஜ் நேயரின் ட்விட்டர் பதிவோ வருமானவரி துறையினர் ஆட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். மக்கள் வருமான வரித்துறை மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்கிறது.
மத்திய அரசின் முழுநேர ஏவல்துறையே வருமான வரித்துறை என பி. சந்திரசேகரன் ட்விட் பதிவிட்டுள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியாக இருந்தாலும், தண்டிக்கப்பட்டால் நல்லதே. ஆனால், அதுவும் நடைபெறாது என்பது ராமசந்திரன் மனோகரின் பதிவு.
இந்த சோதனைகைள் நடவடிக்கைக்கு இட்டுசெல்ல வேண்டும் என்கிறார். வேலுசாமி.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்