You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுவாச சோதனை மூலம் மலேரியா நோய் பாதிப்பை கண்டறியலாம்!
அமெரிக்க விஞ்ஞானிகளின் கூற்றுபடி, தனித்துவப்பட்ட 'சுவாச சோதனை' நடத்தப்படுவதன் மூலம் மக்களிடம் மலேரியா நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என தெரியவந்துள்ளது.
இதற்கான ஒரு ஒழுங்கற்ற முன்மாதிரி மூச்சு சோதனை முயற்சி ஏற்கனவே ஆஃப்ரிக்காவில் நடத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளிடையே இச்சோதனையை முயற்சித்த போது சரியாக இருந்தாலும், வழக்கமான செய்முறையாக இதனை மாற்றுவதற்கு இந்த சோதனையை மேலும் மேம்படுத்த வேண்டியுள்ளது.
இந்த சோதனைக் கருவி மூலம் முகரப்படும் ஒரு வித மணமும், மலேரியாவை பரப்பும் பூச்சிகளை ஈர்கக்கூடிய இயற்கை மணமும் ஒரே மாதிரியாக இருக்கிறது.
பைன் மரங்கள் மற்றும் ஊசியிலை மரங்கள் வெளியிடக்கூடிய டெர்பைன்சபானது, கொசுக்கள் மற்றும் மகரந்த சேர்க்கை செய்யும் வேறு சில பூச்சிகளை வரவழைக்கும் என செய்ன்ட் லூயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மலேரியா பாதிப்பு உள்ளவர்களின் சுவாசத்திலும் இதே மணம் இருக்க, அது கொசு உள்ளிட்ட மற்ற பூச்சிகளை ஈர்க்கும் பட்சத்தில் அவை மற்றவர்களை கடிக்கும் போது பலருக்கு மலேரியா பரவ வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த சோதனை மேலும் கட்சிதமாக இருந்தால், மலேரியா நோயை கண்டறிய இதுவே புதிய மலிவான மற்றும் எளிமையான வழியாக அமையும் என பேராசிரியிர் ஆட்ரி ஓடம் ஜான் மற்றும் அவரது சக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தனித்துவமான வாசனை
மலேரியா பாதிப்பை கண்டறிய இந்த முன்மாதிரி சுவாச சோதனையானது ஆறு மாறுபட்ட மணங்களை அல்லது எளிதில் ஆவியாகக்கூடிய கரிம சேர்மங்களை கண்டறியும்.
மலாவியில், மலேரியா பாதிப்பு இருக்கும் அல்லது இல்லாமல் இருக்கும் காய்ச்சல் உள்ள 35 குழந்தைகளின் சுவாச மாதிரிகளில் ஆராய்ச்சியாளர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அதில் 29 குழந்தைகளுக்கு துல்லியமான முடிவை இந்த சோதைனை தந்துள்ளதால், இதன் வெற்றி விகிதம் 83 விழுக்காடாக கருதப்படுகிறது.
வழக்கமாக நடத்தப்படும் சோதனையை ஒப்பிடும் போது இது மிகக் குறைவாக இருந்தாலும் இதன் நம்பகத்தன்மையை உயர்த்தி இதனை சிறந்த தயாரிப்பாக உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
மலேரியாவை கண்டறிய எளிமையான, வேகமான இரத்த சோதனை முறை இருந்தாலும் அதற்கென சில வரம்புகள் உள்ளதாக வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இரத்த பரிசோதனை செய்வதென்பது விலை உயர்ந்ததாகவும், கிராமப்புற பகுதிகளில் சவால் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது.
இரத்த மாதிரிகள் தேவைப்படாத அல்லது தொழில்நுட்ப நிபுணத்துவம் வாய்ந்த முறை சிறந்த நன்மை பயக்கக்கூடும்.
லண்டன் சுகாதார மற்றும் ட்ராபிக்கள் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் லோகன் கூறுவதாவது: "அறிகுறியில்லாமல் இருக்கும் மலேரியா நோய் பாதிப்பை விரைவாக எப்படி கண்டறிந்து கட்டுப்படுத்துவதென்பது பெரிய சவாலாக உள்ளது, மற்றும் முழுமையாக மலேரியாவை ஒழிக்க நாம் இந்த இலக்கை நோக்கி நகர்வது அவசியமாகிறது. மலேரியா நோய் தொற்றுகளை கண்டறிய ஒரு புதிய கருவி உள்ளதென்பது உற்சாகமளிக்கிறது."
இந்த சோதனை முறையை நம்பகத்தன்மை உள்ளதாக மாற்ற மேலும் சில வேலைகளை செய்வதற்கான தேவை உள்ளது.
அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ட்ராபிகள் மெடிசன் மற்றும் ஹைஜினின் இந்த ஆண்டு வருடாந்திர கூட்டத்தில் இது தொடர்பான கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்