பணமதிப்பிழப்பு: "நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று"

இந்தியாவில் உயர் மதிப்பு ரூபாய் நீட்டுகளை மதிப்பு நீக்கும் நடவடிக்கை எடுத்து இன்றோடு ஓராண்டாகிறது. கறுப்பு பண ஒழிப்புதான் இதன் பிரதான நோக்கமாக சொல்லப்பட்டது. அந்த நோக்கம் நிறைவேறியதா? அல்லது இது அரசின் அப்பட்டமான தோல்வி என்ற எதிர்தரப்பினரின் கூற்று சரியா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டு இருந்தோம்.

அதற்கு பிபிசி நேயர்கள் பதிவு செய்துள்ள கருத்துகள்.

"இது அரசின் அப்பட்டமான தோல்வி மட்டுமல்ல, தேசிய அவமானம். 80 பேர் மொத்தம் ஏடிஎம் வாசலில் சுருண்டு விழுந்து இறந்திருக்கிறார்கள். யாராவது இல்லை என்று சொல்ல முடியுமா?" என்று கருத்து தெரிவித்து இருக்கிறார் சாரா மாணிக்.

"படு தோல்வி" என்று குறிப்பிட்டு இருக்கிறார் சாகுல் ஹமீது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தணிகாசலம், "நோக்கம் நிறைவேறியது" என்று கூறியுள்ளார்.

"நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று. தோல்விதான் மிஞ்சியது" என்று கருத்து தெரிவித்துள்ளார் ராஜசேகர்.

"தொழில்கள் நசிந்ததுதான் மிச்சம்" என்கிறார் பிரபாகரன்

சசிக்குமார் சொல்கிறார், "சாதாரண மனிதன் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பொருளாதார தாக்குதல்"

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :