You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நச்சுப் புகையால் உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள்
உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்ரா - நொய்டாவை இணைக்கும் யமுனா எக்ஸ்பிரஸ்வே என்ற நெடுஞ்சாலையில் இன்று (புதன்கிழமை) காலை நச்சுப் புகை காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டு விபத்துக்குள்ளான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக நச்சுப் புகையின் அளவு, இதன்காரணமாக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருந்த அளவைவிட 30 மடங்கு அதிகமான காற்று மாசுபாடு நிலவி வருகிறது.
இந்திய மருத்துவ கழகம் தற்போது நிலவிவரும் நிலையை 'சுகாதார அவசர நிலை' என்று கூறியுள்ளது. மேலும், நவம்பர் 19 அன்று டெல்லியில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்க வாய்ப்புள்ள மாரத்தான் போட்டியையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
இச்சூழலில், உத்தர பிரதேச மாநிலத்தில், ஆக்ரா - நொய்டாவை இணைக்கும் யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் இன்று காலை, நச்சுப் புகையின் தாக்கம் அதிகமாகவே இருந்துள்ளது. காற்றில் படர்ந்திருந்த மாசு காரணமாக காற்றின் அடர்த்தி தன்மை அதிகரித்து நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டன.
விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
நச்சுப் புகை தீவிரம் அடைந்துள்ளதையடுத்து, புதுடெல்லியில் காற்றின் தரம் மிகமோசமாக மாறி வருவதாகவும், அனைத்து பள்ளிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமைவரை மூடப்பட்டுள்ளதாகவும் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :