இந்து தீவிரவாதம்: கமலின் கருத்துக்கு ஆதரவா? எதிர்ப்பா?

வலதுசாரிகள் மத்தியிலும் தீவிரவாதம் பரவியுள்ளது என்றும், இனிமேல் இந்து தீவிரவாதிகளைக் காட்டுங்கள் என்று சவால் விட முடியாது என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பெரிய விவாதத்தையும் அதை விடாய் பெரிய சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

கமலின் கருத்து உண்மையைப் பிரதிபலிக்கிறதா இல்லை, அவரது அரசியல் பிரவேசத்திற்கான ஆயுதமா என்று பிபிசி தமிழின் நேயர்களிடம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.

"இவர் விளம்பரப் பிரியர் மற்ற மதத்தை பற்றிச் சொன்னால் வெட்டி விடுவார்கள். இந்துவைச் சொன்னால் பேர் கிடைக்கும்," என்று கமலை விமர்சித்துள்ளார் பிரேம் அம்பாஸ் எனும் நேயர்.

" அரசியல் பிரவேசமா?ஆயுதமா? என்பதை விட கமல் நாக்கில் சனி புகுந்து விட்டது," என்பது லூயிஸ் குமாரின் கருத்து.

ஒரே மதத்தை முன்னிறுத்தி ஆட்சியாளர்கள் செய்வதும் ஒரு வகையில் தவறு என்கிறார் சரவணன் கிருஷ்ணன் எனும் நேயர்.

"நல்ல வேளை இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று சொல்லாமல் விட்டார்," என்று பதிவிட்டுள்ளார் சேர்மதுரை சுப்பிரமணியன் எனும் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்.

"விஸ்வரூபம்-2 படதுக்கு மீண்டும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட அறிவிப்போ???," என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீ.கே.வி எனும் பிபிசி நேயர்.

"ஆண்டவரின் அரசியல் வருகை கேப்டனின் சட்டசபை முதல் பிரவேசத்தை நியாபகமூட்டுகிறது," என்று விஜயகாந்தின் கடந்தகால அரசியல் பிரவேசத்தை நினைவூட்டியுள்ளார் ஜமீல் மஜீத்.

"ஒருசிலரின் முட்டாள்தனமான செயல்களுக்கு அநேகம் இந்துக்களை குறைசொல்ல முடியாது. அமைதியை விரும்பும் அநேகம் இந்துக்கள் இருக்கிறார்கள்," என்பது வெற்றி எனும் நேயரின் கருத்து.

"தீவிரவாதம் புரிபவர்கள் அனைத்து மதத்திலும் இருக்க வாய்ப்பு அதிகம்,"என்று கூறியுள்ளார் அஜித் எனும் பிபிசி நேயர்.

"அவர் அரசியலுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று இதிலிருந்தே தெரிகிறது," என்று எள்ளலாக பதிவிட்டுள்ளார் சரவணன் கங்காதரன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :