ராகுலுக்காக டிவிட்டர் பதிவிடுவது செல்லப்பிராணி! வைரல் டிவீட்டும் பாஜகவின் எதிர் கணையும்

ராகுல் காந்தி மற்றும் அவரது வளர்ப்பு நாய்

பட மூலாதாரம், Getty Images/TWITTER

படக்குறிப்பு, ராகுல் காந்தி மற்றும் அவரது வளர்ப்பு நாய்

கடந்த சில தினங்களாக ராகுல் காந்தி டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளார். சற்றே கேலியான தொனியில் வேடிக்கையான வகையில் அவரது கணக்கில் டிவீட் போடப்படுவதால் பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

காங்கிரஸ் துணைத்தலைவருக்கு பதிலாக வேறு யாரோ அந்த டிவிட்டர் கணக்கை கையாளுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு டிவிட்டரில் எழுந்தது.

இந்நிலையில் அவர்களுக்கு வேடிக்கையான முறையில் ஒரு டிவீட் மூலம் பதிலளித்திருக்கிறார் ராகுல்.

டிவிட்டரில் கடந்த ஞாயிறன்று ஒரு டிவீட்டில் குறு வீடியோவை வெளியிட்டார். அதே டிவீட்டில் '' யார் இவருக்கு டிவீட் போடுகிறார்கள் என மக்கள் கேட்கிறார்கள், நான் தெளிவாக சொல்கிறேன். அது நான் தான்..பி.டி..

நான் அவரை விட சாந்தமானவன். ஒரு டிவீட் மூலம் நான் என்ன செய்ய முடியும் என பாருங்கள் ...அச்சச்சோ.. '' என எழுதியிருக்கிறார் ராகுல் காந்தி .

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்த 14 நொடி வீடியோவில் ராகுல் காந்தி தன்னுடைய வளர்ப்பு நாயான பிடியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் ஹலோ எனச் சொன்னதும் அந்த நாய் தனது இரண்டு முன்னங்கால்களையும் உயர்த்துகிறது.

ராகுல் காந்தி அந்த 'பி டி'யின் மூக்கின் மேல் ஒரு பிஸ்கட்டை வைக்கிறார். அது முன்னங்காலை உயர்த்தியபடி பிஸ்கட்டை மூக்கில் ஏந்திய படி நிற்கிறது. பிறகு ஒரு சொடக்கு மூலம் உத்தரவிடுகிறார். உடனே அந்த பிஸ்கட்டை கீழே விழுந்துவிடாமல் கச்சிதமாக கவ்வுகிறது அவரின் செல்லப் பிராணி பி.டி.

ராகுல் காந்தி இந்த வீடியோவை டிவீட் செய்ததன் பின்னர் பல தலைவர்களும் அதனை அவர்களது டிவிட்டர் கணக்குகளில் பகிர்ந்திருந்தனர்.

முன்னாள் நடிகையும் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பொறுப்பாளருமான திவ்யா ஸ்பந்தனா '' இப்போது உங்களுக்கு தெரியும். யாருக்கு இந்த திறமை பொருந்த முடியும்'' என ஒரு டிவீட்டில் எழுதியுள்ளார்.

Twitter

பட மூலாதாரம், Twitter

காங்கிரஸ் கட்சியில் இருந்து பாரதீய ஜனதாவுக்கு மாறிய அஸ்ஸாம் அமைச்சர் ஹேமந்த் பிஸ்வாஸ் ஒரு டிவீட் பதிவில் '' ராகுல் காந்தி ஐயாவை பற்றி என்னைத் தவிர வேறு யாருக்கு நன்றாகத்தெரியும்? நாம் அவசரமாக அஸ்ஸாமின் பிரச்னைகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தபோது அந்த நாய்க்கு பிஸ்கட் ஊட்டுவதில் நீங்கள் வேலையாய் இருந்தீர்கள் அது இன்னமும் நினைவில் இருக்கிறது'' என எழுதியுள்ளார்.

Twitter

பட மூலாதாரம், Twitter

ராகுல் காந்தியின் இந்த பி டி வீடியோ டிவீட்டுக்களை பாஜக சார்பில் நகைச்சுவையான முறையில் மாற்றி டிவீட் செய்து வருகிறார்கள்.

பாஜகவின் தொழில்நுட்ப பிரிவுக்கு பொறுப்பாளரான அமித் மாளவியா 'பேட்மேன்' சுவரொட்டி விளம்பரத்தை வித்தியாசமாக தொகுத்துள்ளார்.

அவர் ராகுல் காந்தியையும் அவரது வளர்ப்பு பிராணியையும் அந்த புகைப்படத்தில் வைத்து '' பி டி யை எடுத்துக்கொள்ளுங்கள். காங்கிரசை காப்பாற்றுங்கள்'' என டிவீட் செய்திருக்கிறார்.

Twitter

பட மூலாதாரம், Twitter

பாஜகவின் பெண்கள் முன்னணி உறுப்பினரான பிரிதி காந்தி சில காங்கிரஸ் தலைவர்களின் ஸ்நாப்சாட் வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட் புகைப்படங்களை ஒரு டிவீட்டில் வெளியிட்டு '' நான் இதுநாள் வரையில் இவர்கள் ஏன் இதுபோன்ற நகைப்புக்குரிய விஷயங்களை செய்கிறார்கள் என புரிந்து கொள்ளாமல் இருந்தேன்...ஆனால் இப்போது புரிந்துவிட்டது #பிடி'' என அவர் குறிப்பிட்டுள்ளார்

Twitter

பட மூலாதாரம், Twitter

பொதுமக்களும் தற்போது பி டி எனும் ஹேஷ்டேக்கை தொடர்ந்து பயன்படுத்தி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருக்கிறது.

இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி அவர்களின் வளர்ப்பு நாய்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள சயன் சாட்டர்ஜி, பி டிக்கு குடும்ப வரலாறு இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பி டி காந்தி என்ற பெயரில் வேடிக்கையான டிவிட்டர் கணக்குகளும் துவங்கப்பட்டுள்ளன.

ராகுல் காந்திக்கு டிவிட்டரில் நாற்பது லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். நரேந்திர மோடியின் பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை மூன்று கோடியே அறுபது லட்சம் ஆகும்.

ஆனால் கடந்த சில தினங்களாக டிவிட்டரில் ராகுல் காந்தி மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

கேலியான மற்றும் வேடிக்கையான தொனியில் அவர் பதிவிடுகிறார். இதன் காரணமாக குறிப்பிடத்தக்க அளவு அவருக்கு பின் தொடர்பாளர்கள் எண்ணிக்கை மற்றும் ரீ டிவீட் எண்ணிக்கை அதிகரித்து வருவது பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :