You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேரறிவாளனை பரோலில் விடுவது குறித்து பரிசீலனை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனை சிறை விடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்டவர்கள் பேரறிவாளனை சிறைவிடுப்பில் அனுப்புவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரினர்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "மதிப்பிற்குரிய பேரறிவாளனை பரோலில் அனுப்புவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், 10 ஆண்டுகளை சிறையில் கழித்த கைதிகளை விடுதலை செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீதிமன்றம் ரத்துசெய்த பிறகு, அவர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், பேரறிவாளனுக்கு சிறுநீர்ப் பாதை தொற்று உள்பட பல உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதால் அவரை பரோலில் விடுவிக்க வேண்டுமென அவரது தாயார் அற்புதமம்மாள் கோரிவருகிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்