You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டும் துல்லிய வீடியோ
ஒவ்வொரு செல்லிலும் புற்றுநோய் பரவுவதை துல்லியமாக விடியோவில் படம் பிடித்துள்ளனர் ஜப்பான் குழுவினர்.
இந்த வீடியோவில், இயல்பான உடல் திசுக்கள் பச்சை நிறமாகவும் புற்றுநோய் திசுக்கள் அடர் சிவப்பு நிறமாகவும் காட்டப்பட்டுள்ளது.
அந்த ஆபத்தான முறையை விளக்க இந்த தொழில்நுட்பம் பயன்படும் என டோக்கியோ பல்கலைக்கழகத்தின் குழு மற்றும் ரிகென் க்வாண்டிடேடிவ் உயிரியல் மையத்தின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எலியின் மீது இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
உடல் முழுவதும் புற்றுநோய் பரவும் ஆபத்தான நிலையை `மெடாசிஸ்` என்பர்.
புற்றுநோய் பரவுவதற்கு முன் அதனை குணப்படுத்துவது எளிதாகும்.
புற்றுநோய் கட்டி வளர வேண்டும் எனவே அது உடைந்து துண்டுகளாகி ரத்த ஒட்டத்தோடு சென்று புதிய திசுக்களை தாக்குகிறது.
புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பது குறித்த ஆழ்ந்த புரிதல் அதன் சிகிச்சைக்கான புதிய யோசனைகளுக்கு வழிவகுக்கும்.
விலங்குகளின் மூலம்
எலி ஒன்றிற்கு புற்றுநோய் திசுக்கள் புகுத்தப்பட்டு அது ஃப்ளோரசன் வெளிச்சத்திற்குஉட்படுத்தப்பட்டது்
எலியின் உடல் ரசாயனத்தின் மூலம் தெளிவாக தெரியும்படி ஆக்கப்பட்டு ஆய்வாளர்கள் நோயை பரவும்படி செய்தனர்.
அதன்மூலம் அதன் உடல் விரைவாக படம் பிடிக்கப்பட்டு, புற்றுநோய் திசுக்கள் கண்டறியப்படும்.
ஆய்வின்படி உடம்பு முழுவதும் பரவுவதற்கு முன்பாக, நுரையீரல், குடல் மற்றும் கல்லீரல் ஆகியவற்றில் வளரும் புற்றுநோய் குறித்த தகவல்கள் செல் ரிபோர்ட்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியான ஆய்வில் வெளிவந்துள்ளது.
பிற செய்திகள்:
புற்றுநோய் ஏற்பட்ட பகுதிகளில் அதன் வடிவங்கள், அளவுகள், மற்றும் பரவக்கூடிய தன்மை ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் அளவிற்கு இந்த படங்கள் இருக்கும் என ஹிரொகி உயேடா என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த தொழில்நுட்பத்தை மனித மருத்துவ மாதிரிகளில் செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளார் அவர்.
இந்த திசுக்கள் குறித்த படமும் மனித மாதிரிகளின் 3டி வடிவங்களும் வரும் எதிர்காலத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேலும் எளிதாகவும், வெற்றிகரமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ள உதவும்.
மேலும் பரிசோதனைகள் புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டுகிறது.
பிற செய்திகள்:
பல புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டத்தின் போது அழிந்துவிடுகிறது மேலும் அது பிற பகுதிகளுக்கு செல்லும் முயற்சி தோல்வியடைகிறது என கோஹெய் மியாசோனா என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவை வளர்வதற்கான ரசாயன சமிக்ஞைகள் வழங்கப்படும்.
நுரையீரல் திசுக்களை ஆக்கிரமித்துக் கொண்டு அது புற்றுநோயை வேகமாக வளரச் செய்யும் தன்மையை டிஜிஎஃப் என்ற ரசாயனத்தை ஆய்வாளர்கள் சோதித்தபோது தெரியவந்தது.
இந்த தொழில்நுட்பம் ஆட்டோ இம்யூன் நோய்கள் உள்ளவர்களின் உடல் செல்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறியவும் இந்த பயன்படலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்