You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 15 இந்தியர்கள் கைது
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் "இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானை உற்சாகப்படுத்தியும்" முழக்கங்கள் எழுப்பிய 15 பேர் இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
முஸ்லிம் ஆண்கள் மீது தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டதாக காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, "பாகிஸ்தானுக்கு ஆதரவான" முழக்கங்களை எழுப்பி பட்டாசு வெடித்ததாக, அண்டை வீட்டார் அளித்த புகாரின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.
இந்திய குற்றவியல் சட்டங்களின் கீழ், தேசத் துரோக குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது.
தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் தங்கள் பாஸ்போர்டுகளை ஒப்படைக்கவேண்டும், அவர்கள் அரசு வேலை பெறும் தகுதியை இழப்பார்கள், அழைப்பு விடுக்கப்படும் போதெல்லாம் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்பதோடு, சட்ட நடைமுறைகளுக்கான கட்டணங்களையும் அவர்கள் செலுத்தவேண்டும்.
இந்திய எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிய குற்றச்சாட்டில் தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியதால் அல்ல என்று காவல்துறை செய்திகளை மேற்கோள் காட்டி, `இந்தியா டுடே` கூறுகிறது.
இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்தி, பிரச்சனையில் சிக்குவது முதல் முறையல்ல.
2014 ஆம் ஆண்டில், இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் 66 பேர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
2016 ஆம் ஆண்டில், இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், அந்த மாநில மாணவர்களுக்கும், பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, காவல்துறையினர் அங்கு அனுப்ப்ப்பட்டனர்.
தொடர்பான செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்