போயஸ் தோட்ட இல்லத்தில் தீபா நுழைய முயன்றதால் பதற்றம்

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா திடீரென சென்னை போயஸ் தோட்ட இல்லத்திற்குள் நுழைய முயல்வதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

ஜெ.தீபா

போயஸ் தோட்ட இல்லத்தை மீட்கவே அங்கு வந்திருப்பதாக ஜெ.தீபா கூறியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாலும், அப்பகுதியில் பதட்டம் சூழ்ந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில் சசிகலாவும், அவரை சார்ந்தவர்களும் தங்கி வந்தனர்.

போயஸ் தோட்ட இல்லத்தில் நுழைய தீபா முயற்சியால் பதற்றம்

பட மூலாதாரம், Getty Images

இந்த சூழலில் ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான தனக்கும், தனது சகோதரருக்கும்தான் போயஸ் தோட்ட இல்லம் சொந்தம் என ஜெ.தீபா தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறி வந்துள்ளார்.

இதற்கிடையே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜெ.தீபா அப்பகுதிக்கு வந்துள்ளது அங்கு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்