You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாட்டிறைச்சி சர்ச்சை முடியவில்லை, மோமோஸுக்கு தடை கோருகிறார் பாஜக உறுப்பினர்
மத்திய ஆளுங்கட்சியான பாரதீய ஜனதாகட்சியை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தெருக்களில் விற்கப்படும் ஒரு பிரபல உணவு குறித்து போர் தொடுத்திருப்பது பொது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேக வைத்த இறைச்சி அல்லது காய்கறி பாலாடையால் செய்யப்பட்ட மோமோஸ் எனப்படும் உணவுவகை, திபெத் மற்றும் நேப்பாளத்தின் பிரபல உணவுவகைகளாகும்.
இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ரமேஷ் அரோரா, மோமோஸ் உணவு வகை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வியாதிகளை உருவாக்குகிறது, அதனால், இதனை தடை செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆபத்தை விளைவிக்கும் என்று எண்ணற்ற இந்தியர்களால் நம்பப்படும் எம்எஸ்ஜி எனப்படும் மோனோ சோடியம் குளுடமேட் வேதிப்பொருள் சேர்க்கை மோமோஸ் உணவு வகையில் இருக்கிறது என்று ரமேஷ் அரோரா தெரிவித்துள்ளார்.
ஆனால், மோனோ சோடியம் குளுடமேட் வேதிப்பொருள் ஆரோக்கியகுறைவை ஏற்படுத்தும் என்று பலரும் எண்ணிக்கொண்டிருப்பது போல ஆரோக்கியகுறைவானது இல்லை என பல சர்வதேச ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
மோமோஸ் குறித்து ரமேஷ் ஆரோராவின் பிரச்சாரத்தத்துக்கு வியப்பு முதல் சீற்றம் வரை பலவகையான எதிர்வினைகள் மக்களிடமிருந்து வந்துள்ளன.
வடஇந்தியாவில் மோமோஸ் உண்பதால்தான் பெண் தோழியே கிடைக்கும், அதனையே தடைசெய்தால் நாங்கள் பெண் தோழிக்கு எங்கே போவது என்று ஒருவர் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மோமோஸ் உணவுவகைக்கு எதிராக அரோரா மிகத்தீவிரமாக பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. குறைந்தது கடந்த 5 மாதங்களாக மோமோஸ் உணவு குறித்த மோசமான விளைவுகளை அவர் பேசி வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
ஆனால், மோமோஸ் மட்டுமல்ல, இந்தியர்களிடையே பிரபலமாக இருந்து வரும் தெருக்களில் விற்கப்படும் சீன வகையிலும் எம்எஸ்ஜி வேதிப்பொருள் இருப்பதாகவும், அதனால் வயிற்று புற்றுநோய், ஒவ்வாமை மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படலாம் என்று அரோரா மேலும் தெரிவித்தார்.
இவ்வகை உணவுகளில் சுவையூட்டுவதற்காக எம்எஸ்ஜி வேதிப்பொருள் சேர்க்கப்படுவது இந்தியர்கள் பலரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும், அது அவர்களை இவ்வகை உணவுகளை உண்பதிலிருந்து தடுத்து நிறுத்தவில்லை.
அமெரிக்காவில் உள்ள எஃப்டிஏ எனப்படும் உணவு மற்றும் மருந்து தொடர்பான சங்கம், உணவுவகைகளிலும் எம்எஸ்ஜி வேதிப்பொருள் சேர்க்கப்படுவது ஜிஆர்ஏஎஸ் எனப்படும் பொதுவாக பாதுகாப்பானது என அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதுவும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்